பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

109

பிராமணர் இடைச்சியரிடம் தயிரும் நெய்யும், ஏனோரிடம் அப்பமும் (ரொட்டியும்) அவல் கடலையும் இன்குடிப்பும் வாங்கியுண்டுகொண்டு, வெள்ளாளர் சமைத்ததையுண்ணோ மென்று கூறுவது, உண்மைக்கு முரணானதும் உத்திக்குப் பொருந்தாததும் ஆகும்.

9. வரண வேறுபாட்டை வரணிப்பதும் வற்புறுத்துவதுமான இலக்கிய வொழிப்பு

மனுதரும சாத்திரம், சில புராணங்கள், பகவற்கீதையிற் சில பகுதிகள், சில நாடகங்கள், தமிழ்ப் பாட்டியல்கள் ஆகிய வற்றைப் புலவர் தேர்வுப் பாடமாக வைக்காததோடு, அவற்றை நூலகங்களினின்று அகற்றுதலும் வேண்டும்.

10. பத்தாண்டிற்குப்பின் தாழ்த்தப்பட்டவர் சலுகை நீக்கம்

தாழ்த்தப்பட்ட வகுப்பினரை உண்மையாக வுயர்த்து வதற்குத் தகுந்த வழிகளைக் கையாளாது, அரசியற் கட்சிகள் அவர் செய்தியைக் கட்சி வளர்ச்சிக்கும் தேர்தல் வெற்றிக்குமே பயன்படுத்திக்கொண்டு, பெயரளவிலும் கடமைக்காகவும் ஒருசில சலுகைகளை மட்டும் காட்டிச்செல்லின், உலகுள்ள அளவும் அவர் நிலைமை திருந்தாமலே யிருக்கும்.

ஆதலால், பொருளாட்சித் துறையில் மேல்வகுப்பாரோடு அவர் சமநிலை யடைதற்கேற்ற பத்தாண்டுத் திட்டத்தை வகுத்து, அது முழுவெற்றி பெறுமாறு கண்டிப்பாகக் கடைப் பிடித்து, அதன்பின் அதை அடியோடு நிறுத்திவிடுவதே எல்லார்க்கும் தக்கதாம்.

தீண்டாமை யொழிப்பு

தீண்டாமை யொழிப்பும் குலவொழிப்புள் அடங்கு மேனும், அதன் கடுமையும் விரிவும்பற்றி இங்குப் பிரித்துக் கூறப்பட்டது . இது சக்கரத்துட் சக்கரம் போன்றதாதலின், இதைப் பிரித்துக் கூறினாலன்றி முற்ற விளக்க முடியாது.

தாழ்த்தப்பட்டவர் என்பார் பள்ளர், பறையர், பாணர், பறம்பர் (தோல்வினைஞர்) என்பாரும், அவருக்குத் தொண்டு செய்யும் வண்ணார், மஞ்சிகர் அல்லது குடிமக்கள் (முடி வினைஞர்) என்பாரும், ஆகப் பல குலத்தார்.

பண்டைமுறைப்படி, பறையர் என்பார் பறைப்பாணர்; பாணர் ன்பார் யாழ்ப்பாணர். குழற்பாணர், இசைப்பாணர் (பாடகர்) என்பவர் ஏனையிருவகைப் பாணர். மண்டைப் பாணர் என்பவர்