பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

வகுப்பினரெல்லாம் சட்டையணியக் கூடா தென்று ஒரு கட்டுப்பாடிருந்தது. 19ஆம் நூற்றாண்டுத் தொடக் கத்தில், திருவனந்தபுரத்து நாடார்குலக் கிறித்தவப் பெண்டிர் சட்டையணிந்தனர். அதனால் தம்மை மேல் வகுப்பாரென்று சொல்லிக்கொள்ளும் தமிழரே அதை யெதிர்த்துக் கலகஞ் செய்தனர். பின் அது ஒருவாறு அடங்கிற்று. முப்பதாண்டு கழித்து மீண்டும் அச் சச்சரவு கிளர்ந்தது. அப்போது சென்னை ஆள்நராக இருந்த வயவர் சார்லசு திரவெல்யன் (Sir Charles Trevelyan) நாடார்குலப் பெண்டிரும் அவர் போன்றாரும் பிறரும் சட்டையணியலாம் என்று உத்தரவிட்டார். அதையொட்டித் திருவாங்கூர் அரசரும் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

1874-ல், மதுரைக் கயற்கண்ணியம்மை யென்னும் மீனாட்சி யம்மன் கோயிலுள், நாடார் குலத்தார் புக முயன்று தடுக்கப்பட் டனர். அதன்பின், தம்மைச் சேர சோழ பாண்டியரின் வழிவந் தவரென்று கூறித் தமக்குச் ‘சத்திரியர்' என்று பெயர் சூட்டிக் கொண்டு. சட்டமுறைப்பட்ட எல்லா எழுத்தீடுகளிலும் பதிவேடுகளிலும் தம்மைச் ‘சத்திரியர்' என்றே குறித்தனர். அவர் நிறுவிய கல்வியகங்களும் தங்கல் மனைகளும் 'சத்திரியர்' என்னும் பெயர் தாங்கின. தம் குலத்தை யுயர்த்துவதற்கான வழி வகைகளை ஒல்லும் வகையாற் செல்லும் வாயெல்லாம் மேற் கொண்டனர்.

66

"குடி செய்வ லென்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்

(குறள்.1023)

என்றார் திருவள்ளுவர். நாடார் குலத்திற்கோ குடிசெய்வார் பலர் தோன்றினர். தென்திருநெல்வேலி வட்டாரத்திலுள்ள நாடார்மார் கிறித்தவக் கல்வியினாலும், வடதிருநெல்வேலி வட்டாரத்திலுள்ள நாடார்மார் வணிகத்தினாலும் விரைந்து முன்னேறினர். அவருட் பாளையங்கோட்டைக் கிறித்தவரும் விருதுநகர் சாத்தூர் சிவகாசி வணிகரும், வெள்ளாளரளவு துப்புரவும் செட்டிமாரளவு வினைத் திறமும் பெற்றனர் எனின் மிகையாகாது.

1899-இல் நாடார்குலத் தென்மதத்தார் (இந்துக்கள்) சிவகாசி விசுவநாதீசுவரர் கோயில் என்னும் சிவன் கோயிற்குட் புகமுயன்றனர். அங்கும் தடுக்கப்பட்டனர். ஆயினும், நாடார் மார் முனைந்திருந்ததனால், கோயில் சாத்தப்பட்டது. அது கண்டு, மேல் வகுப்பார் என்பவரெல்லாம் பகை கொண்டார்.