பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

மறவன் போன்ற ஆண், மாட்டின் ஆணான காளை. வ்ருஷ- வ்ருஷப = காளை.

தமிழில் விடையென்பது, இளமை மறத்தை அல்லது வலிமையை மட்டும் உணர்த்தும். விடைக்கோழி யென்பது பெட்டைக்கோழியையுங் குறிக்கும்.

வ்ருஷப என்னும் வடசொல் வடிவம் கலவைத் தமிழில் விடபம்-இடபம் என்று திரியும். ஆராய்ச்சியில்லாதவர் விடை யென்னும் மூலச்சொல்லை விடபம் என்பதன் திரிபென மயங் குவர்.

மேற்கூறியவாறு, பெரும்பால் தமிழ்ச்சொற்கட்கு, இயன்ற வரை பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த் தலாகவும் வடமொழியாளர் பொருட்கரணியங் காட்டியுள்ளனர். இயலாவிடத்து இடுகுறியென முத்திரை யிட்டுள்ளனர். தமிழில் இடுகுறியேயில்லை. "எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே" என்பது தொல்காப்பியம் (பெயரியல் 1).

தமிழ் கடந்த மூவாயிரம் ஆண்டாக மறைக்கப்பட்டும், வழிபாட்டிற்குத் தகாத மொழியென்று தள்ளப்பட்டும் உள்ளது. தவத்திருக் குன்றக்குடி அடிகள், அருட்டிரு அழகரடிகள், உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, பேரா. மு.ரா. பெருமாள் முதலியார் முதலிய தமிழறிஞரைக் கொண்ட ஒரு குழுவமைத்து, ஆராய்ந்து உண்மை கண்டு, தமிழ்நாட்டு முப்பல் கலைக்கழகங்களி லு ம் தமிழே தலைமையாகவும் (Main), சமற் கிருதம் கீழ்த்துணையாகவும் (Subsidiary) வழங்குமாறு செய்வது, தமிழ்நாட்டு அரசின் முதற் கடமையாகும். திருக்கோவில் களிலும் தமிழே வழிபாட்டு மொழியாதல் வேண்டும்.

2. தமிழ்நாட்டின் தனித்தன்மை

தமிழ்நாடு, வரலாற்றாலும் மக்களாலும் உணர்ச்சி யாலும் கொள்கையாலும் மொழியாலும் இலக்கியத்தாலும் பிற நாடுகளினும் வேறுபட்டதாகும்.

ஏனை யிந்திய நாடுகளெல்லாம் சமற்கிருதத்தைத் தலை மேற்கொள்ளும்; இன்றியமையாததாகக் கருதும்; இந்தியை அனைத்திந்திய ஆட்சிமொழியாகவோ கட்டாயப் பாடமாக வோ ஏற்கும்; வடசொற் கலப்பால் தம் மொழிவளம்