மொழிநூல்
85
அல்பானியம், அர்மீனியம், இத்தைத்தம் (Hittite) என்பன நடுவணாரி யத்தையும்; ஈரானியம் (பாரசீகம்), இந்திய ஆரியம் என்பன கீழையாரித் தையும் சேர்ந்த கிளைகளாகும்.
வேதமொழியும்
ஆரியமாகும்.
அதற்குப் பிற்பட்ட சமற்கிருதமும் இந்திய
வடஇந்தியாவிலும் நடுவிந்தியாவிலும் ஒருகாலத்தில் திரவிட மொழி களாயிருந்தவை, பின்னர் ஆரியகலப்பால் ஆரியமொழிகளாக மாறியுள்ளன.
தமிழே திரவிடமாகவும் திரவிடமே ஆரியமாகவும் மாறியிருப் பினும், தமிழ் இந்திய ஆரியரால் மறைக்கப்பட்டுள்ளமையாலும் தமிழ் தோன்றிய குமரிநாடு மூழ்கிப்போனமையாலும், மேலையாரியர் உண்மை நிலையறியாது ஆரியத்தை ஒரு தனிமொழியின் வளர்ச்சியாகக் கருதி அதற்கு மூலமென ஒன்றைப் படைத்து, அதற்கு முதல் இந்தோ பியம் (Proto - Indo - European) எனப் பெயரிட்டுள்ளனர்.
―
ஐரோப்
(11) மேலையாசியாவிலும் வடஆப்பிரிக்காவிலும் பண்டு பேசப் பட்ட அக்காடியம் (அசீரியம், பாபிலோனியம்) அரமேயம், சிரியம், மோவாபியம், பினீசியம், எபிரேயம் என்னும் மொழிகளும், இன்று பேசப் படும் அரபியும், வடகிழக்காப்பிரிக்காவிற் பேசப்படும் எத்தியோப்பிய (அமரிக்கு) மொழியும், சேமியம் (Semitic) என்னும் குடும்பத்தைச் சேர்ந் தனவாகும்.
(12) பண்டை எகிபதியமும் இன்று எத்தியோப்பியாவில் வழங்கும் கோபதியமும் (Coptic), சோமாலி, பெர்பெர் சது (Chad) முதலிய மொழி களும், ஆமியம் (Hamitic) என்னும் மொழிக் குடும்பமாகும்.
பண்டை எகிபதிய வழிவந்த கோபதியம் இன்று எத்தியோப்பிய வழி பாட்டு மொழியாக மட்டும் வழங்குகின்றது.
சேமியத்தையும் ஆமியத்தையும் இணைத்து ஆமிய சேமியம் (Hamito - Semitic) என ஒரு குடும்பமாகக் கூறுவதுமுண்டு.
அரமேயம் இன்று தமசுக்கு (Damascus) நகர்ப்பக்கத்தில் முச்சிறு குமுகங்களாற் பேசப்படுபவதாகப் பாடுமேர் கூறுவர்.
பல சிறு
(13) சூடான் நாட்டில் மிகச் சிறிதே அறியப்பட்டுள்ள பல மொழிக்குடும்பங்கள் உள்ளன.