பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

=

காரணம் = கடல், சங்கு. வாரணம் - வரணன் = கடல் அல்லது நெ-தல்நிலத்

தெ-வம்.

வாரி-வாரி. வ(வ.); வாரணம்

வாரண (வ.). வாரணன் வருண(வ.)

வளைவு அல்லது வட்டக்கருத்தினின்று கிளைத்துள்ள பல்வேறு கருத்துச் சொற்கள் இங்குக் காட்டப்பட்டில.

வல் என்னும் அடி மல் என்பதினின்று திரிந்திருப்பதையும், வல் என்பதி னின்று வாரணம் என்பதுவரையும் காட்டப்பட்டுள்ள சொற்களெல்லாம் நேரே கோவையாகத் தொடர்புகொண்டிருப்பதையும், வடமொழியில் இங்ஙன மன்றி, இடையிடையுள்ள ஒருசில சொற்களே வழங்குவதையும், பெரும் பாற் சொற்கள், தமிழ் உலக வழக்கில் அடிப்படைச் சொற்களாக விருப் பதையும், ‘வல்’, ‘வ்ருத்த’ என்னும் இரண்டையும் வடமொழியார் வெவ் வேறு மூலங்களாகக் காட்டுவதையும், நோக்குவார்க்கு வட்டம் என்பது தூய தென்சொல் லென்றும், அதுவே பிராகிருதத்தில் வட்ட என்றும் சமற்கிருதத் தில் வ்ருத்த என்றும் முறையே திரிந்துள்ளதென்றும், தெற்றெனத் தெரியலாகும்.

ஒ.நோ நடி-நடம்-நட்டம்(த):-ந்ருத்த(வ.)

Valve (L. valva), vert (L. vertere), volve, volute (L. volvere), wal- low (L. volvere), marina (L. mare, marinus) முதலிய பற்பல மேலையாரியச் சொற்களெல்லாம், வள், வளவு, வட்டம் (வ்ருத்த), வாரி, வார ணம் முதலிய தென்சொற்களினின்று திரிந்தனவே.

ஒருசில வடசொற்கள் பிராகிருதவாயிலாகத் தமிழில் வந்து திரிந்துள்ளது உண்மையே ஆயின் அவை தமிழுக்கு எத்துணையும் வேண்டாதன என அறிக. 8. தமிழ் சமற்கிருதத்தால் வளம்பெற்றது என்பது.

சமற்கிருதச் சொற்கலப்பால், தமிழ்ச்சொற்களுட் பல இறந்துபட்டும் பல வழக்கிறந்தும் பல பொருளிழந்தும் அல்லது மாறியுமே உள்ளன.

9. இந்திய நாகரிகம் ஆரியரது என்பது.

ஆரிய வருகைக்கு முற்பட்ட முதலிரு கழக நூல்களும் அழிக்கப்பட்ட தினாலேயே, சமற்கிருத நூல்கள் முதனூல்களும் மூலநூல்களும்போல் தோன்றுகின்றன.

10. ஆரியம் தனிமொழி என்பது.

ஆரியம் திரிமொழி என்பதை, என் The Primary Classical Language of the World என்னும் நூலைக் கண்டு தெளிக.