பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

வண்ணனை மொழிநூலின் வழுவியல் இஞ்சி கா-ந்தாற் சுக்கு. தமிழில் இஞ்சி என்பது சுக்கை ஒரு போதுங் குறியாது.

சேம்பெர்சு அகரமுதலி இஞ்சிவேர் என்னுஞ் சொல்லை மலையாச் சொல்லாகக் குறித்திருப்பது மேனாட்டாரின் தமிழறியாமையை எத்துணைத் தெளிவாகக் காட்டுகின்றது! இஞ்சி தொன்றுதொட்டுத் தென்னாட்டில் விளைந்து வருவதையும் அவர் இன்னும் அறிந்திலர்.

உயர்வுநவிற்சி (Hyperbole) என்பது உயர்ந்தோரும் கொள்ளத்தக்க

அணியே.

66

“அனிச்சப்பூக் கால்களையாள் பெ-தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை.

66

'அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்

(குறள். 1115)

(குறள். 1120)

என்று பொ-யாமொழிப் பொதுமறை யாசிரியரான திருவள்ளுவர் என் னும் தெ-வப்புலவரும், உயர்வுநவிற்சியை ஆண்டிருத்தல் காண்க.

தமிழ் முதற்றா- மொழி என்பதற்கும் உலகமுதல் உயர்தனிச் செம் மொழி யென்பதற்கும் எல்லாவகைச் சான்றுகளும் உள்ளன. தமிழ்ப் பகை வரின் பொறாமைக்கண் அவற்றைக் காணமுடியாது இருண்டு போயிருக் கலாம்.

குமரிநாடே தமிழன் அல்லது அறிவுடை மாந்தன் பிறந்தகம். குறிஞ்சி யும் முல்லையுமான பாலைநில மறவர். தமிழருள்ளும் முதியவராதலால், அவர் குடி தொன்றுதொட்டு முதுகுடி எனப்பெற்று வருகின்றது.

66

‘முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானும்

என்பது தொல்காப்பியம் ஆதலால்,

"கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி

(பொருள்.79)

என்னும் ஐயனாரிதனார் கூற்றில் யாதொன்றும் இழுக்கில்லை என்க. சுவணம்

உவண் = மேலிடம். உவணம் = மிக வுயரப் பறக்கும் பருந்து, கழலுன், கழுகு. உவணம் - சுவணம். ஒ. நோ: உருள் - சுருள், உழல் -சுழல், உதை- சுதை.

சுவணம் ஸுபர்ண (வ.).