பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

31

பிறிதினியைபின்மை நீக்குதல், பிறிதினியைபு நீக்குதல் என்பன, முறையே, இனஞ்சுட்டாப் பண்பு, இனஞ்சுட்டும் பண்பு என்றே முதன்முதல் தமிழிற் சொல்லப்பெற்றன.

'இனஞ்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செ-யு ளாறே

(501)

என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. தமிழைப் பின்பற்றியே வடவர் அயோக வ்யவச் சேதம், அந்யயோக வ்யவிச் சேதம் என்னும் குறியீடுகளை ள ஆக்கிக்கொண்டனர்.

பழந்தமி ழிலக்கண நூல்கள் வடமொழி யிலக்கண நூல்கட்கு முந்தின வும் மூலமுமாதலால், முதற்காலத் தமிழிலக்கணக் குறியீடுகள் மூலமே யன்றி மொழிபெயர்ப்பல்ல.

தமிழிலக்கண முதனூல்கள் உலகில் முதன்முதல் தோன்றியதினால், பல இலக்கணங்கள் குறியீடின்றியே உணர்த்தப்பெற்றன. பிற்கால நூலாராகிய வட மொழியாளர் அவற்றுட் சிலவற்றிற்குக் குறியீடுகளை ஆக்கிக் கொண்டனர்.

எ-டு: தமிழ்நூல்

வினைமுடிபு

வடநூல் காரகம்

சில குறியீடுகள் வடமொழியிலேயே முதன்முதல் தோன்றின வேனும், அவை வடமொழிச் சென்ற தென்சொற்களால் ஆகியுள்ளன.

உருவகம், ஞாபகம்

எ-டு: உருத்தல் உருவகம்-ரூபக(வ.).

தோன்றுதல். உரு-உருவு-உருவம்-ரூப(வ.) உருவம்-

"

காண்

ஆங். கான்

க்னா

க்னோ(g)-சமற். ஜ்ஞா-ஜ்ஞாப

க்னோ

இலத். க்னோ(g) கிரேக்.

ஜ்ஞாபக.

வடமொழி யணிநூல்கள் பிற்காலத்தனவாதலால், பல அணிப்பெயர்கள் வடநூல்களிற் புதிதா-த் தோன்றியுள்ளன. ஆயின், அவ்வணிகள் பழையனவே.

முதலிரு கழக நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டமையால், தேசிகர் காலத்தில் தனித்தமிழ் நூலில்லை. இன்று அவர் இருந்திருந்தால், மறை