பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

3

பெரியோர் பக்கம்

இளைஞருக்கு மேற்பட்ட இடைஞரும் முதியோரும் ஆடும் ஆட்டுத் தொகுதி பெரியோர் பக்கமாம்.

1. ஆண்பாற்

ண்பாற் பகுதி

(1) பகலாட்டு

தாயம்

இது பலவகைப்படும். அவற்றுள் பெருவழக்கானது பதினைந்து நாயும் புலியும் என்பதாம். இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஆடப்பட்டதென்பது,

“வல்என் கிளவி தொழிற்பெய ரியற்றே

66

நாயும் பலகையும் வரூஉங் காலை

(தொல். 373)

ஆவயின் உகரங் கெடுதலு முரித்தே உகரங் கெடுவழி அகரம் நிலையும்”

என்னும் நூற்பாக்களால் (சூத்திரங்களால்) அறியலாம்.

(ஷை.374)