பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் எப்படிக் கெட்டான்?

105

தமிழராக்கத்தையே வேரறுப்பதாகும். ஆகையால், தமிழ்விடுதலையும், தமிழ் வளர்ச்சியும் குறிக்கோளாக் கொண்டதொரு புதுக்கட்சி ஏற்படுத்தவேண்டும். அல்லது காங்கிரசில் இருந்துகொண்டே தமிழுக்குழைக்க வேண்டும்.

வடநாட்டுத் தலைவர்கள் தேசியத்திற்காகப் பாடுபட்டதனால், தமிழர் தமிழ்நாட்டையும் தமிழையும் இழக்க முடியாது. தமயந்தியைப் பாம்பினின்றும் தப்புவித்த வேடன் அவளுக்குக் கணவனாக முடியாதே!

தமிழர் எல்லாவற்றையும் இழந்து தமது மொழியைமட்டும், செல்வமாகக் கொண்டிருக்கின்றனர். எதுவரினும் எதுபோயினும் தமிழைமட்டும் தமிழர் விடார் என்பது திண்ணம்.

தமிழ் வாழ்க!