பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

24

‘பாலாபிஷேகம் பழநி' என்ற மெட்டு

ப.

தாவீது ராசகுமார கெம்பீரநீ தந்த பவனித் தரிசனமே

கோவேறு மாகழுதை வாகனாரூட கும்பிடவந்தேம் பரிசனமே உரைப்பாட்டு

தேவாதி தேவன் பெருந்திரு நாமத்தால் வரும்

மூவாத ஏசு பெரும் முருகோலைச் சாமரம்

முடுகியல்

உடைகளை விரித்தவ ரோசனாபாட மிடைதர நெரித்திடும் மிகுசனங் கூடச்

U. 6T.

சாலேமின் ராசாநற் சாந்தகுணச் செல்வன் சாரி செய்து சாலேம் மாநகர்க்கே கோலா கலத்துடன் கூட வருவதைக் கூறுவேம் சீயோன் குமாரத்திக்கே உரைப்பாட்டு

தேவா லயத்திற்குள் வியாபாரம் நீக்கி நோவாருக்குச் சுத்தம் மேவார வாக்கி

முடுகியல்

பாலகர் ஓசனா பகரவும் வேத

பாரகர் மாசினம் மிகுதியு மோத

U. 6T.

பாலகர் வாயிற் பரமானந் தத்துதிபாரு மென்றமெய்ப் பராபரனே

129

(தாவீது)