பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

143

35

சிலுவைத் தியானம்

‘கத்தனவாரிகி' என்ற மெட்டு

ப.

எத்தனை வேதனை இத்தகை ஈனக் குருசின் மீது இத்தகை யாவும் ஏது குற்றம் செய்தாய்

து. ப.

அத்தனே ஏன் என்னைக்கை விட்டீரென் றரற்றியொரு சுத்தவ நாதையாய்த் துன்புற ஏது காரணம்

(எத்தனை)

மட்டில்லா மகிமையின்பம் விட்டு மாநிலத்தில் வந்து

எட்டுணையும் இதமின்றி ஏளனமாகிச்

சுட்டெரிக்கவு முதவாத சட்டகம் நானென்று பற்றிக்

கெட்டதோர் நாயினுங் கேடுறுங் கேவலம் எனைமீட்க (எத்தனை)

36

‘புள்ளிக்கலாப மயிற் பாகன்' என்ற மெட்டு

வெள்ளிக்கிழமை வெயில் நேரம் – மனம்

வேகுங் கல்வாரிமலை யோரம்

-

மன

வேதனை மிகக்கடந்த

வேதனை மரத்தறைந்த வீரர் பழிகாரர்

முள்ளின் மகுடம்முடி மேலே - ஒரு

மூங்கிற்கழை கரச்செங் கோலே - அந்த

மூவுலக வேந்த னொரு

பாவமிகு மாந்தனெனச் சிலுவை பெறுங் கொலுவை

ஆணி கைகா லிணைகள் ஏறிப் பல

அருவிப்பட இரத்தம் பீறி - மிக

அவதிப்படத் துறந்த

அகதித் திறத்திறந்த தேனேபழி நானே

வாரிலொரு வடமேபின்னி உடன்

வளைத்து வருத்த ரத்தங் கன்னிப் - புலி