பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

3

ஆயனில் லாமந்தை அங்கலாய் கடமாம் அருந்தமிழ் நாடெங்கும் அடிமைசேர் மடமாம் தேயுந் தமிழ்நாடும் திறந்துள்ள மடமாம் திசையெட் டாரும்வந்து சேரவே இடமாம்.

4

பணத்தைச் சுருட்டுவார் பழகிய தலைவர் பதவியோடு பட்டம் பெறுவாரே சிலவர் கனத்தைப் புகழோடு கருதுவார் புலவர் கழகத்தால் வணிகத்தைப் பெருக்குவார் வலவர்

5

மறைமலை யடிகளும் மாண்டனர் முன்னே மறைந்தார் பன்னீர்ச்செல்வம் முந்நீரிற் பின்னே இறைவனே தமிழர்க்குத் தலைவனாம் இன்னே இறைஞ்சி வணங்குக அவனடி மன்னே.

120. தமிழர் பின்பற்றவேண்டிய தலைவர் இருவர்

பண் செஞ்சுருட்டி

ப.

எந்தக் கட்சியிலேநீ யிருந்தாலும் என்றும்

முந்திப்பற்றும் தலைவர் வள்ளுவரே.

து . ப .

பிந்தித் தலைவர் மறைமலை யடிகள்

107

தாளம் - முன்னை

பிறர்

(எந்தக்)

சொந்தப் பெருநலமே கொள்ளுவரே

வாழ்வினில் அனைவரும் உயர்வடையத் - திரு

வள்ளுவர் வகுத்தனர் நல்வழியே

தாழ்வற மறைமலை யடிகள் பின்னே மிகத்

தந்தனர் தனித்தமிழ் இன்மொழியே

(எந்தக்)