பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

xi

மதங்களையும் பழக்க வழக்கங்களையுமே ஆரியர் மேற்கொண்டு அவற்றைத் தமவாகக் காட்டினர் என்பதையும்; மொழிகளில் தேவமொழியென ஒன்றில்லை யென்பதையும்; அங்ஙன மிருப்பின், அது இயற்கையும் எளிமையும் வெளிப்படையும் நடுநிலை அன்பு பிறப்பொப்பு வேளாண்மை முதலிய கருத்தறிவிப்பும்பற்றித் தமிழேயாம் என்பதையும்; பழந்தமிழர் பிற துறைகளிற் போன்றே மொழி, இலக்கியம், இலக்கணம் என்பவற்றிலும் தலைசிறந் திருந்தனர் என்பதையும்; தாம் கருதிய எல்லாக் கருத்துகளையும் அறிந்த எல்லாப் பொருள்களையும் குறிக்கச் சொல்லமைத் திருந்தனர் என்பதையும் அறிதல் வேண்டும்.

உண்மைக்

கு

இதனால், வடமொழியை முதன்மொழியாயும், வடநூலை முதனூலாயும் வைத்துத் தமிழாராயப்புகின். நேர்மாறான முடிபுகளே தோன்று மென்பதையும், வீரசோழியம், இலக்கணக்கொத்து, பிரயோகவிவேகம் முதலியன அளவை நூல்களாகா என்பதையும் உணர்தல் வேண்டும்.

இயல்பான மொழிகளும் சொற்களும் ஒரு நெறிப்பட்டே தோன்றி இயங்குகின்றமையின், முறைப்படி யாராயின் அவற்றின் நெறிமுறைகள் யெல்லாம் கண்டுகொள்ளலாம் என்பது, இச் சுட்டு விளக்கத்தை நடுநிலையாய் நூணுகி நோக்குவார்க்கு இனிது புலனாம்.

எனது மொழியாராய்ச்சி குன்றாவாறு இடையிடை ஊக்கிவரும் என் நண்பர் திருமான் வ. சுப்பையாப் பிள்ளை அவர்கட்கும் பிறர்க்கும் யான் மிகமிகக் கடப்பாடுடையேன்.

இவ் வாராய்ச்சிக்கும் அதன் வெளியீட்டிற்கும் தோன்றாத் துணையாயிருந்துதவியருளும் எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளை நெஞ்சார நினைத்துத் தலையார வணங்குகின்றேன்.

ஞா. தேவநேயன்