பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

9

III. சுட்டு வேர்ச்சொற்கள்

ஐஞ்சுட்டு வேர்களும் அவற்றினடிப் பிறந்த சொற்களிற் சிலவும்

1. ஆகாரச்சுட்டு

(1) சேய்மைச்சுட்டு (Remoteness): ஆ = அந்த (அது, அவை). ஆங்கு அங்கு Cf. A.S. thar, E. there, Skt. tatra, ஆங்கர் > (யாங்கர்) > (நாங்கர்) > ஞாங்கர். ஆண்டு, Cf. E. yon, yond, yonder, A.S. geond, Ger. jener, that, root ya.

ஆது அது, அதா, அதோ, அதோளி. அது – அதன் (தெ)

அம் : அந்து, அந்த, அந்தா, ஒ. நோ. உம் > உந்து. அம்மை = சேய்மையிற் சென்றுவிட்ட முற்பிறப்பு. ஆ - அவ் : (அவள்), அவண். அவண் = அவ்விடம். ஆன் அவன்; ஆம் > அவம்.

அவன், அவள், அவர், அவ - அவை.

அல் அல் + து = அஃது – அத்து

-

அல் +து = அன்று

ஒ.நோ: பல் + து = பஃது.

ஒ. நோ.: நல் + து = நன்று.

லகரவீற்றுச் சுட்டு வினாவடிகளும் உண்டு என்பதை அல, ஏலா என்னும் தெலுங்குச் சொற்களாலும், அல்லி இல்லி எல்லி என்னும் கருநடச் சொற்களாலும் உணர்க. Cf. L. ille, he, Ar. al, the.

ஆன் - அன் : அன்ன, அன்னா (சுட்டு); அன்ன (such)- சுட்டாச்சுட்டு. அன்ன (உவமவுருபு), அன்னது, அற்று.

அனை (சுட்டு). அனை +து = அனைத்து. அனை, அனைய (உவமை.) அகம் = அவ்வுலகம், வீடு (heaven,bliss), வீடுபோன்ற தங்கிடம், இடம், உள்ளிடம், உள்ளம்.

66

'அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு

(குறள். 247)

என்னுங் குறளில், அவ்வுலகம் இவ்வுலகம் என்பன முறையே சேய்மையும் அண்மையும்பற்றி வீட்டையும் ஞாலத்தையுங் குறித்தல் காண்க.

அப்பால் > Gk. apo; L. ap, ab, abs, a; Skt. apa; Ger. ab; E. ab,

abs, a, off, of, away.