பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

11

ஒருவர் செல்லுதலாவது சேய்மைப்படுதல்; செல்வதினால் உடம்பிற்கு அசைவும் அதனால் வருத்தமும் பிறக்கும்; செல்லச் செல்ல உடம்பு சுருங்கித் தோன்றும்; இரவானவுடன் ஓரிடத்தில் தங்கநேரும்; செல்லுதல் ஓரிடத்தினின்று நீங்குதலாகும்; நீக்கமே முடிவு; ஒரு பொருளின் விளிம்பு நீங்குவது விரிதல்.

=

=

அலுவல்

அல்லாடு = அலை, வருந்து; அல்லா = வருத்தம்; அல்லல் = வருத்தம், துன்பம்; அலத்தல் = வருந்தல்; அலக்கழி = வருத்து; அலம் துன்பம்; அலக்கண் = துன்பம்; அலம் வா = = அலமா; அலமருதல் = வருந்துதல்; அலவு = வருந்து; அல் அலு; அலுத்தல் அசைதல், களைத்தல்; க அலு + அல் = வருந்திச் செய்யும் வேலை, வேலை; அலு – அலுங்கு; அலுங்குதல் = அசைதல்; அலுக்கு = அசைப்பு, இசையசைப்பு (கமகம்). அல் அல அலை. அலைதல் = அசைதல், பலவிடஞ் செல்லல், வருந்துதல்; அலை இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் நீர்த்திரை. அலைக்கழி = வருத்து. அலை - அசை. அல் ஆல். ஆலுதல் = ஆடுதல். ஆலத்தி - ஆளத்தி = விளக்கை வட்டமிட்டு ஆட்டுதல், இசையை வட்டமிட்டு ஆட்டுதல்போல் வளர்த்தல்; ஆல் - ஆலு - ஆடு. ஆடுதல் = அசைதல், விளையாடுதல், கூத்தாடுதல். ஆடுவது ஆடை. அசைத்தல் = அசைத்து உடுத்துதல். “புலித்தோலை அரைக்கசைத்து” என்னுந் தேவாரத் தொடரை நோக்குக. அல் - அல்கு. அல்குதல் = சுருங்குதல். அல்கு சுருங்குதல். அல்கு – அஃகு. அஃகுதல் = சுருங்குதல், நுட்பமாதல், கூராதல்.

66

எ-டு: “அஃகிய இ உ", “அஃகி யகன்ற அறிவென்னாம்.’

=

L. acuo, to sharpen, from root ak, sharp, E. acute, L. acus, a needle, E - L acumen, sharpness, quickness of perception, E. acme, Gk. akme - ake, a point.

அல்கு – அல்குல் = சுருங்கிய இடை, இடையின் கீழ்ப்பக்கம். அல்கு - அலகு. கூரிய பல பொருள்கள் அலகுபெயர் பெற்றன. அவை கத்தி, பறவை மூக்கு, இலை, நெற்கதிர், நெல் முதலியன. பறவை மூக்கிற்கொத்த கன்னமும் அலகெனப்பட்டது. அலக்கு இலை. அலக்கு அலகு இலை; அலம் கூரிய

=

கலப்பைக்கொழு, கலப்பை.

=

இலக்கு

=

=

அல்கு - அஃகு - அஃகம் - நெல், கூலம் (தானியம்). அஃகு - அக்கு அக்கம் = கூலம், விதை, மணி. உருத்திர + அக்கம் = உருத்திராக்கம் சிவமணி; அல் அல்கு; அல்குதல் = தங்குதல்; அல்குநர் = தங்குபவர், வசிப்பவர்; அல் அல்கு தங்கும் இராக்காலம், இரா; அல் + அவன் = அல்லவன் அலவன் இரவில் தோன்றும் நிலா, இரவில் வெளியேறும் நண்டு. இனி குறட்டின் அலகுபோற் கௌவுகின்ற காலையுடையது நண்டு என்றுமாம். அலவு – அலகு. அல் - அறு; அறுதல் நீங்குதல், ஒடிதல்; அறுதி = முடிவு. அர் என்னும் ஒலிக்குறிப்பினின்று தோன்றிய அறு (cut) என்னுஞ் சொல் வேறு. aquiline L. aquila.

=

அல்

அலர் - மலர். சேய்மைப்படுவதால் விரிதல் உண்டாகும்.