பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

ஒ.நோ: அகல் = செல், விரி; படர் = செல், விரி.

கண்ணைக் குறிக்கும் அக்கம் என்னும் சொல் > அக்ஷம்(வ.).

ஒரு பொருள் முழுதும் ஓரிடத்தினின்று செல்லுதல் நீங்குதலாம்; அதன் மையம் நிற்க மற்றப் பகுதிகள் மட்டும் இடம்பெயர்தல் விரிதலாம். மலர் - மல்லா. மல்லாத்தல் = மலர்ந்து மேனோக்கிப் படுத்தல். மல்லா X குப்புறு; குப்புறு = குவி, கீழ்நோக்கிப் படு. அல் - அல-அலசு; அலசுதல் = அசைத்தல், அசைத்துக் கழுவுதல், அலைதல், வருந்தல், நீங்கியிருத்தல்; அலசடி = வருத்தம்; அலசு - அலசல் = இழை நீங்கியிருக்கும் ஆடை; அலவு - அலவல் = அலசல், கற்பின்மை (கட்டின்மை); அல் – அல – அலம் - அலம்பு . அலம்புதல் = அசைத்தல், அசைத்துக் கழுவுதல். அலம்பு – அலப்பு; அலப்புதல் = வாயசைத்தல், பிதற்றல். அலட்டு = அசை, வருத்து, பிதற்று. அலதி, அலக்கு = நீக்கம், வேறு. ஒ.நோ: விள் - வில் - விலு விறு - வேறு = விலகினது, வேறானது. அலதி - அலாதி. அலக்கு - அலாக்கு. இத் தமிழ்ச்சொற்களே இந்தியில் வழங்குகின்றன. ‘நான் அலாதி', 'அவனை அலாக்காய்த் தூக்கிக்கொண்டு போய்விட்டான்' என்பன உலக வழக்கு. அலவை பிதற்றல், வாயாடிப் பெண், கற்பின்மை.

வீறு

2. ஈகாரச்சுட்டு

1. அண்மைச்சுட்டு (Proximity): ஈ = இந்த (இது, இவை.). ஈங்கு - இங்கு. Cf. Ger.hier, A.S. her, E. here FF600T 1.

ஈது - இது - இதா இதா - இதோ - இதோளி. இதர் (இ.).

இது - இதன் (தெ.) Cf. L. id. Goth. ita, A.S. hit, Ice. hit; E.it. Dut. het.

இகரவடியாய்ப் பிறந்த அண்மைச்சுட்டு ஆரியமொழிகளில் சேய்மைச் சுட்டாய் வழங்குகின்றதென்க. வடமொழியில். இதஸ் என்பது இருமைச் சுட்டாயுமிருத்தல் காண்க.

Cf. A.S. la, E. lo.

த - ல போலி. ஒ. நோ: பதார்த்தம் – பலாத்தம். Skt. ittham, thus, E

item.

இம் : இந்து, இந்த, இந்தா.

இம்மை = இப்பிறப்பு, உலக வாழ்க்கை.

Cf. A.S. this, E. this, Ice. thessi, Ger. dieser (sl.) E. these (pl.)

-

இவ் : (இவள்), இவண். இவண் = இவ்விடம்.

ஈன் > இவன். நம் > இவண்.

இவன், இவள், இவர் இவ

-

இவை.

இல் இல் + து = இஃது: இல் + து

=

இன்று.