பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

29

முகம் முகர் முகரை. 'மூஞ்சி முகரை', 'முகரையைப் பார்' என்னும் வழக்குகளை நோக்குக. முகர் = முகம் பொறித்த முத்திரை. முகர் முகரா மொகரா (பெர்.) = முத்திரையுள்ள காசு. முகம் + திரை - முகத்திரை - முத்திரை = முகவுருவுள்ள சின்னம். முகம் + திரம் - முகத்திரம் - மோதிரம் = முத்திரையுள்ள விரலணி. திருமுகம் = முத்திரையுள்ள கடிதம்.

முகம்

முகமை

=

+

மகமை

முகாமை முன்மை, முதன்மை, தலைமை. முகம் = முக்கியம் (தலைமை, சிறப்பு) > Skt. mukhya. முகமை பெருமை. மகமை > மஹிமா (வ.). தமிழில் தமிழில் 'மை'யீறு மை'யீறு பண்புப்பெயர் விகுதியாயிருத்தலை நோக்குக.

முகம் மகம் = பெருமை. L. magnus, great, மஹத் (வ.) மகம் மகன் = கடவுட் படைப்பிற் பெரியவன் (மாந்தன்), ஒருவனுக்குப் புதிதாய்ப் பிறக்கும் மாந்தன் (புதல்வன்). மகம் – மகவு. மக - மா = பெரிய. மகன் - மான் - மன். மன் = பெருமை, மிகுதி, பெரும்பான்மை. Cf. E. many... A.S manig; cog. forms are found in all the Teut.languages; allied to L. magnus.” Ch. E.D.

மன் - மாந்தன். மன்பதை = மக்கட்கூட்டம்.

மன் Goth. man, A.S. mann, Ger. man, Ice. madhr (for mannr), Skt. manu.

மகம் - மகந்து – மாந்து - மாந்தன்.

மன் = பெரியவன், அரசன். மன் + அன் – மன்னன். ஆள் என்னும் சொல் பொதுமகனையும் அரசனையும் குறித்தலை நோக்குக. ஆள் = person. ஆளுதல் அரசு செய்தல். ஆளி = ஆள், அரசன். ஆளன் ஆள், அரசன். ஆள்+ மை - ஆண்மை = ஆள்தன்மை, ஆட்சி.

=

King என்னும் சொல்லுக்கு A.S. cyning = cyn (a tribe) and suffix

- ing, meaning 'belonging to', ‘son of', the 'tribe', the elected chief of the people என்று Skeat கூறியிருப்பது கருதத்தக்கது.

=

முகம் = முன்னிடம். எ-டு: துறைமுகம். முகம் = பக்கம், நிலை. எ-டு: மறைமுகம், உண்முகம், ஒருமுகம் (ஒற்றுமை), நேர்முகம் (நேர்த்தம்). முகம் முன்பக்கம், மேற்பக்கம். முகவரி = மேல் விலாசம். முகப்பு = கட்டடத்தின் முற்பகுதி. Cf. Fr., E. facade. from It. facciate, the front of a building, faccia, the face.

முகம் = இடம். முக

=

முகத்தல் = தன்னிடத்துக் கொள்ளல் (த.வி.), ஒரு கலத்திற் கொள்ளல், அளத்தல் (பி.வி.). முகவை = அளவை, பொலியளப்பு. முகம் மூக்கு. முகத்தில் மிக முன்னால் நீண்டிருப்பது மூக்காதலால், முகப்பெயர் மூக்கையுங் குறித்தது. முகம் - முக. முகத்தல் = மணத்தல், விரும்புதல். "மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்" (மூதுரை). முக - மோ. மோத்தல் = = முகர்தல், விரும்புதல். மோ+கம் - மோகம் = விருப்பம், காதல், பெருங்காதல். மோகன் =