பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

முற்செலவுக்கருத்தும் துளைத்தற்கருத்தும்

31

உள் = முற்செல், பொருந்து, துளை. ஒரு பொருள் தொடர்ந்து முற்செல்லும்போது, எதிரேயிருக்கிற பொருளொடு முதலாவது பொருந்துதலும், பின்பு அதனூடு துளைத்துச் செல்லுதலும் காண்க.

ஊழியம்.

உழு = முன்னோக்கி நிலத்தைக் கீறு. உழு - உழ - உழை - உழத்தல் = வருந்தி வேலை செய்தல். ஊழியம் = தொழில்,தொண்டு. உறு = முற்சென்று பொருந்து, பொருந்து, திரள், வலிமிகு. பல பொருள்கள் ஒன்றாய்ப் பொருந்துவதால் திரட்சியும் உறுதியும் உண்டாதல் காண்க. உறு - உறவு, உற்றார். உறு - உறழ். உறு = உறை = பொருந்த விழு, வலிதாய்ப் பொருந்து, காரமாகு. உறு = மிக. உறுதி = மிகுதி,

திண்ணம், உரம், உண்மை.

திரட்சி,

L. verus, true, O. Fr. verai, Fr. vrai, Ger. wahr, A.S. voer, E. very, real, in a great degree; verity, truth.

உருத்தல்

=

முற்படுதல், வேகமாய்த் தோன்றுதல், மூண்டெழுதல், சினத்தல், எரிதல். உரு = தோற்றம், வடிவம், படிமை. உரு - உருவு - உருவம் – ரூப (வ.) உருவு- உருபு = வேற்றுமை வடிவம். உரு = தோற்றம், பொருள், நகைப்பொருள், நிறம், எழுத்து, மந்திரவெழுத்து, பாட்டு, சினம், நெருப்பு. உருப்படி = பொருள், தனிப்பொருள், பாட்டு. உரு - உரும் = சினம், நெருப்பு, இடி. உரு + திரம் - உருத்திரம் = சினம். உருத்திரம் + அன் – உருத்திரன் = அழிப்புத் தெய்வம், நெருப்புக்கடவுள், சிவன். உருத்திரன் + அக்கம் - உருத்திராக்கம் (சிவமணி). உருத்திரம் > ருத்ர (621.).

Cf. A.S. wradh, E. wroth, Ice. reidh - r, 0. Ger. reid, உருத்திரன் > ருத்ர (வ.). உருத்திராக்கம் > ருத்ராக்ஷ (வ.)

-

-

உரும் - உருமி = வெப்பமாகு, புழுங்கு. உருமி + அம் - உருமம் = வெப்பம், வெப்பமிக்க நண்பகல். உருமம் - உருப்பம் = நெருப்பு, சினம்.

உரு - குரு. குருத்தல் = தோன்றுதல், சினத்தல், எரிதல். குரு = நெருப்பு, சூட்டாலுண்டாகும் கொப்புளம் (prickly heat, boil).உருமம் - குருமம் = சூடு. Hi. garam, Skt. gharma, Gk. therme, heat, O.L. formus, A.S. wearm, Ger. warm, E. warm, hot.

குருத்தம் (கோபம்.) > க்ரோத (வ.). குரு = நெருப்பு, நெருப்பின் நிறமான சிவப்பு, ஒளி, அகவொளி தரும் ஆசிரியன்.

"குருவுங் கெழுவு நிறனா கும்மே" (தொல். 785). குரு = செந்நிறம். குருதி சிவப்பு, அரத்தம், செவ்வாய் (Mars). குருதிக் காந்தள் = செங்காந்தள். குரு குரவன் = ஆசிரியன். பெரியோன்,

=

உர் – உரசு, உரை, உராய். உரிஞ்சு = பொருந்து, தேய்.

Fr. L. frico, to rub, E. friction.