பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

உரம் = பொருந்தும் மார்பு, வலிமை, பயிர்க்கு வலிமை செய்யும் எரு. உரம் - உரகம் = மார்பால் நகரும் பாம்பு.

உள் - உள்ளு உள்ளு – முற்பட நினை, ஊக்கமாய் நினை, நினை. உள்ளம் - ஊக்கமுள்ள மனம், மனம்.

"உள்ள முடைமை யுடைமை (குறள். 602). உள்ளல் = ஊக்கத்துடன் நினைத்தல், நினைத்தல். உள் = மனம், உட்பக்கம். உள் - உள்ளல் - உள்ளான் = நீருக்குள் முழுகும் பறவை. உள்ளி = நிலத்திற்குள்ளிருக்கும் வெங்காயம். உள்கு - நினை. உள்கு – உட்கு = அச்சத்தால் உள்ளொடுங்கல், அச்சம். உள் - உரு = ரு அச்சம். உள்கு + ஆர் - உள்கார். (உளுக்கார்) - உட்கார் = ஒடுக்கமாய்க் குந்து, குந்து. கட்டடம் உட்கார்ந்துவிட்டது (விழுந்து ஒடுங்கிவிட்டது)என்னும் வழக்கை நோக்குக. (உள்கி) - (உட்கி). உக்கி = உட்கார்ந்து எழும் தண்டனை. (உளங்கு உறங்கு = ஒடுங்கித் தூங்கு. உள் = உண் = உள்ளிடு, வாய்க்குள்ளிடு, சாப்பிடு. உண் ஊட்டு.

Cf. A.S. fedan, E. feed.

உள் - உணர் = உள்ளத்தாலறி. உட்கொள் = உண், உள்ளத்திற் கொள். உள் - உளவு = உள்ளாராயும் துப்பு. உள் - ஊடு = உட்புறம், நடு, குறுக்கு. ஊடு ஊடை = ஊடு செலுத்தும் இழை (woof). உள் - உறி - உறிஞ்சு. ஒ.வே: உறிஞ்சி. Gk.syringx, a pipe, E. syringe.

உள் - உளி = உட்கொத்தும் கருவி. உள்- உரு - உருவு = ஊடுசெல், கையூடிழு. உடை = உட்பக்கம் திற. உள் உளு = உள்ளே துளைத்துச் செல்லும் புழு. உளுத்தல் = புழுவால் துளைக்கப்படல். உள் + அது - உள்ளது – உளது = உள்ளிருக்கிறது, இருக்கிறது. உள் + து - உண்டு. உள் + + மை உண்மை இருப்பது, மெய். உண்டு + ஆகு உண்டாகு.

உளை = துளை, குடை, நோ, வருந்து, வெறு. உளைத்தல் = துளையினின்று ஒலித்தல். “கடலுளைப்பதும்” (கம்பரா. நட்புக். 45). உளை - உய - உயா = வருத்தம். உய - உயங்கு = வருந்து. உள் உர உரல் = துளையுள்ளது. உர

சொல்லு.

உரை = ஒலி,

L. oris, the mouth, oro, to speak. E. oral, oration, oracle, etc.

துள்

துர = முற்செலுத்து.

Ger. treiben, to push, A.S. drifan, E. drive.

துரத்து = (1) (முன்னுக்கு) ஓட்டு, (2) நெஞ்சுக்காற்றை வாய்வழி முன்னுக்குச் செலுத்து, to cough. துர - துரை = வேகம், மிகுதி. தும்மு = சளியை மூக்குவழி முன்னுக்குத் தள். துருத்து = முன்னுக்குத் தள்.

Ice. thrysta, E.thrust, L. trudo. -

துருத்து - துருத்தி (bellows) - துத்தி – தித்தி. துர = முன்னுக்குத் தள், உட்செலுத்து, துளை. துரப்பு = செலுத்துகை, முடுக்குகை, துளைக்கை, குடைவரைப் பாதை (tunnel). Drive என்னும் ஆங்கிலச் சொல்லும்

=

=