பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்

நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள ஒழுக்கம் = நடக்கை, வரிசை. ஒழுக்கு ஒழுகு – E. leak (முதற்குறை.) ஒள்

-

""

47

(தொல். 801)

ஒழுங்கு = நீட்சி, வரிசை, முறை. ஓட்டை = துளை.

Walk என்னும் ஆங்கிலச் சொல் ஒழுகு (நட) என்னும் தமிழ்ச் சொல்லை ஒலியாலும் பொருளாலும் ஒத்திருக்கின்றது. ஆயினும், ஆங்கில அகராதியில் (A.S.) wealcan (to roll, turn) என்னும் பகுதி காட்டப்பட்டிருப்பது பொருத்தமே.

ஒழுங்கு - L. longus, Ger. lang, A.S. lang, E. long; found in all the Teut. Languages.

=

ஒள் - ஒண் ஒடு - ஓடு. ஒடு, ஓடு பொருந்த, கூட (3ஆம் வே.உ.) உ - உள் = பொருந்து. உள் - உடம் - உடங்கு உடங்கு - உடக்கு. உடம் - உடன் . உடம்பு. உடம் - உடந்தை.

உடல். உடம்

-

-

உடம்படு - உடம்பாடு. உடன் = பொருந்த, கூட (3ஆம் வே .உ.). உடல், உடம்பு = உடனிருக்கும் கூடு. உடம் உடமை = உடனிருக்கும் பொருள். உடமை உடைய (பெ.எ.) உடனுள்ள, உடமையாகக் கொண்ட. உடைய 260L Fr.de. உள் உரி - உரிமை. உரி - உரித்து = உரிமை.

=

Cf. O. Fr. heir, L. heres, E.heir, one who inherits, E. herit, to take as heir, Fr. heriter. உள் - உடு = உடலொடு பொருந்த அணி. உடு

உடை.

உள்

ஒள்

=

பொருந்து, உட்படு, ஒடுங்கு. ஒச்சட்டை ஒஞ்சட்டை = ஒல்லி. ஒச்சி - ஒஞ்சி – ஒசி = ஒடுங்கு, நாணு. ஒடுங்கு = அடங்கு. ஒல் - ஒல்லி. ஒல் ஒல்கு – ஒற்கம்.

+

=

ஒ-ஓ = பொருந்து. ஒ + இயம் ஓவியம் ஒப்பு, ஒன்றற்கொப்பாக எழுதும் சித்திரம்.

சுள் என்னும் அடி

=

சுள் = (முற்சென்று) ஊசிபோற் குத்து, குத்துவதுபோற் சுடு, சுடுவதுபோல் உறை, சுடுவதுபோற் கோபி. சுள்சுள்ளென்று குத்துகிறது, சுள்ளென்று வெயிலடிக்கிறது, சுள்ளென்று உறைக்கிறது என்னும் வழக்குகளை நோக்குக. நெருப்புச் சுட்டத்தைப் பொத்துப்போயிற்று என்பது வழக்கு. பொத்தல் துளைத்தல். நெருப்பினாற் கருகும் பொருள் சுருங்குவதாலும் நெருப்புப் பிழம்பான கதிரவன் வட்டமாயிருப்பதாலும், சிறுமைப்பொருளும் வட்டப்பொருளும் சுள் என்னும் அடிக்குண்டு. உறைப்புப்போலப் புளிப்பும் ஒரு கடுத்த சுவையாதலால், புளிப்பையும் சுள்ளென்னும் அடி குறிக்கும்.

Cf. E. pungent = pricking, being of hot taste.