பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

"ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்."

55

ஏங்கு - இயங்கு - இயக்கு = ஒலி, வாத்தியத்தை ஒலி. ஏ - இய - இயம் = ஒலி, சொல், வாத்தியம். இயவர் = வாத்தியக்காரர். இயம் = வாத்தியக்காரர். இயம் - இயம்பு = ஒலி, சொல்.

ஏ இய

இயை இசை = ஒலி.

ஏம் - ஏம்பு - தேம்பு = ஏங்கு. தேம்பித் தேம்பி யழுகிறான் என்னும் வழக்கை நோக்குக.

ஏ- சே - சேய். சேய்மை = உயரம், தூரம். மேனோக்கிய தொலை உயரமும், பக்கம் நோக்கிய தொலை தூரமுமாகும்.

ஏல் - எல் = மேலெழும் சூரியன், ஒளி, வெள்ளை, தீ, செம்மை. எல் – என்று = சூரியன், தீ. என்று + ஊழ் என்றூழ்.

என்று - ஏன்று - ஏண்டு - யாண்டு - ஆண்டு.

எல் – எல்கு – இளகு = நெருப்பால் உருகு என்றுமாம்.

ஒ.நோ: உரு (நெருப்பு) - உருகு. எல்கு எஃகு = உருக்கு.

-

எல் - எரி - எரு = காய்ந்த சாணம். எரி - எரு - எருப்பு (தெ.) = சிவப்பு. எல் – எர் – எல்> இல். எர் > இர்.

இலந்தை = செம்பழமுள்ளது. இரத்தி = இலந்தை.

இராகி = சிவந்த கேழ்வரகு. இராகி (தெ.) = செம்பு. L. oeris, copper.

இல்

இர்

அல். அலத்தகம் = செம்பஞ்சுக்குழம்பு.

அர். அரத்தம் = சிவப்பு, குருதி. 'அரத்தப்பூம் பட்டாடை'. அரக்கு = சிவந்தது. அரிணம் அருணம் = சிவப்பு. அருணன் காலைச்

செங்கதிரவன்.

அரத்தம்

ரத்தம் - ரக்த (வ.). Ice. raudh, Ger. roth,Celt. ruadh, rhudd, Gk. rythros, L. ruf, A.S. read, E. red, blood like colour. எல் இல் இல

இலகு இலங்கு. இலங்குவது இலக்கம்.

இலகுதல் = விளங்குதல். “எல்லே யிலக்கம்” (தொல். 754).

இலகு - இலக்கு = விளக்கத்திற்குரிய பொருள், எடுத்துக்காட்டு, குறி, இடம். மலையிலக்கு = மலைபோல் விளங்கக்கூடிய பொருள்.

Cf. E. illustrate, from L. illustris - il, in, luceo, to shine.

இலக்கு + அம் - இலக்கம். இலக்கு + இயம் - இலக்கியம் > லக்ஷ்யம் (வ.). விளக்கத்திற்குரிய பொருள், எடுத்துக்காட்டு, குறி, இடம், நோக்கம். இலக்கு = இடம். L. locus, a place. இதனின்று locus, local, locate முதலிய ஆங்கிலச் சொற்கள் பிறக்கும். ஓர் இடத்தை இலக்கு என்பது தென்னாட்டு வழக்கு.