பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

ஓங்கு ஓக்கம் = உயர்ச்சி, எழுச்சி, பெருமை. ஓங்கல் = மலை, யானை. ஓச்சு = உயர்த்திப்பிடி. ஓ - ஓம் = உயர்த்து, வளர். பாதுகா. ஓ = உயர், முடி, நீங்கு, ஓ ஓவு. ஓவற = நீங்காமல். ஓ நீங்காமல். ஓ - ஓய். ஓய்தல் = முடிதல், பருவம் முடிதல், நீங்குதல், வேலை நீங்கி யிளைப்பாறல், வலிநீங்குதல், குன்றுதல்.

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்

ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.

ஒ. ஒட்டை

ஒட்டகை ஒட்டகம்

(தொல். 814)

= உயரமான விலங்கு. ஒய்யாரம் = உயரம், பெருமை, செருக்கு. ஒயில் = உயரம், செருக்கு, உயரக் குதித்தாடும் கும்மி. ஒ - உ. உக = உயர். உகள் = உயரக் குதி, துள்ளு. "உகப்பே உயர்தல் உவப்பே உவகை

உச்சி உச்சம். உச்சி

99

(தொல்.789)

உச்சிதம் - உசிதம் = உயர்ந்தது, சிறந்தது. உட் (இ.) = எழுந்திரு. உதி = உயர், கீழிருந்து தோன்று, தோன்று. உதி + அயம் உதயம் > உதய (வ.). என்பது வடமொழியில் உயர்வு, எழுச்சி, ஊக்கம், முயற்சி முதலிய பொருள்களைக் குறிக்கும் முன்னொட்டாகும்.

எ-டு: உத்தம, உத்பவ, உத்சாக.

உத்தரம் = உயரத்திற் குறுக்கேயிடும் பெருமரம், உயர்ந்த வடதிசை, பின்னே கூறும் பதில். உயரக் கருத்தில் பின்மைக் கருத்துத் தோன்றும். 'மேலே' ‘மேலும்’, ‘மேலும் மேலும்’, ‘அதன்மேல்', 'அதன் மேற்பட்டு' என்பவை தமிழிலும், 'on', 'upon', 'over' என்பவை ஆங்கிலத்திலும் பின்மைப் பொருள் தருதல் காண்க. ஒரு குறித்த காலத்தின் உச்சிக்கப்பாற்பட்டது பின்மை யென வறிக. உத்தரம் உத்தரவு = பதில், விடை, ஆணை. உத்தரம் = மேற்பகுதி, பிற்பகுதி. உத்தரகாண்டம் = பிற்காண்டம். உப்பக்கம் = பின்பக்கம், முதுகுபக்கம், முதுகு. முன்மைப் பொருள் தரும் உகரச்சுட்டும் உயரப்பொருளும் பின்மைப் பொருள் தரும் உகரச்சொல்லும் வெவ்வேறாகும். இவற்றுள் பின்னது ஓகாரத்தின் திரிபு என அறிக.

=

உப்பு = (வி.) எழும்பு, பரு, வீங்கு; (பெ.) எழும்பும் உவர்மண், உவர்க்கல். உப்பசம் = வீக்கம். உம் = உயரம், பின்மை. உம்மை பிற்பிறப்பு, மறுமை. “உம்மை யெரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்.” உம் உம்பு - உம்பர் = உயரம், உயர்ந்த

தேவருலகு, தேவர். உம்பர் - இ. ஊப்பர்.

Skt. upari, E. up, upper, Gk. hyper, L. super, Fr. sur. உம்பல் உயரம், யானை, பின்னோன் (வழித்தோன்றல்). உம்பன் = உயர்ந்தோன். உப்பு + அளம் - உப்பளம் உப்பளம் – உம்பளம் - உம்மௗன் உம்மணன் உமணன்.

உயர் - உயரம். உவண் = மேலிடம் (சீவக. 2853). உல்லாசம் = உயர்ச்சி, களிப்பு. உவணம் = உயர்ச்சி, உயரப் பறக்கும் கருடன். உவணை = தேவருலகம். உவர் மேலெழும்பும் உப்பு நிலம், உப்பு. உவர் - உவரி = கடல். உன்னு = உயரக் குதி, எழு. உன்னதம் = உயர்ச்சி, உயர்ந்த இடம்.

=