பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

(1) தன்மைப் பெயர்

IV. மூவிடப்பெயர்

ஏன் யான்

நான் (ஒருமை)

ஏ > ஏம் – யாம் – நாம் (பன்மை)

வேற்றுமைக் குறுக்கம்: ஏன் என். யான் – என். நான் நன். ஏம் எம். யாம் - எம். நாம் எம். நாம் - நம். பன்மை வடிவங்களுள் யாம் என்பது தனித்தன்மைப் பன்மைக்கும், நாம் என்பது உளப்பாட்டுத் தன்மைப் பன்மைக்கும் கொள்ளப்பட்டன. இவற்றுள், முறையே விலக்கப்பட்டதும் உளப்படுத்தப்பட்டதும் முன்னிலையே. படர்க்கை தன்மையோடு சேரின் தன்மையிலும், முன்னிலையோடு சேரின் முன்னிலையிலும் அடக்கப்படும்.

இரட்டைப் பன்மை: யாம் + கள் - யாங்கள். நாம் + கள் - நாங்கள். வேற்றுமைக் குறுக்கத்தில், இவை முறையே எங்கள், நங்கள் என்றாகும்.

நன், நங்கள் என்னும் வடிவங்கள் வழக்கு வீழ்ந்தன. இவற்றுக்குப் பதிலாய், முறையே, என், நம் (ஒற்றைப் பன்மை) என்பவை வழங்குகின்றன. யாங்கள் என்னும் தனித்தன்மைப் பன்மைக்குப் பதிலாய், நாங்கள் என்னும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை தவறாக வழங்கிவருகின்றது.

நாம் என்னும் பெயர் தெலுங்கிலும், நான் நாம் என்பவை ஆரிய மொழிகளிலும் மகர முதலாகத் திரியும்.

ந - ம போலி, எ- டு: மேமு (தெ.). மாம், மயா (வ.). me,my (E.).

மகரம் வகரமுமாகும். ம - வ போலி. எ-டு: we (E)

(2) முன்னிலைப்பெயர்

i. அண்மைச்சுட்டடி

ஈன் - (யீன்) - நீன் (ஒருமை)

ஈம்

(யீம்) - நீம் (பன்மை)

நீன் – நீ. நீ + இர் - நீயிர் - நீவிர் – நீர்.

வேற்றுமைக் குறுக்கம்: நீன் (நீ) – நீன். நீம் (நீர்) - நிம் (வழக்கற்றது). இரட்டைப் பன்மை: நீம் + கள் - நீங்கள்.

வே.கு: நீங்கள்

-

நிங்கள் (வழக்கற்றது).