பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மூவிடப்பெயர்

ii. முன்மைச் சுட்டடி

ஊள

{

ஊன் -(யூன்) - நூன் (ஒருமை) உம் - (யூம்) -நூம் (பன்மை)

வேற்றுமைக் குறுக்கம்: நூன்

63

நுன் உன். நூம் - நும் - உம். நூன், -

நூம் என்னும் வடிவங்கள் மறைந்தன.

இரட்டைப் பன்மை: நூம் + கள் - நூங்கள் (மறைந்தது).

வே. கு: நூங்கள்

நுங்கள்.

ஆரிய மொழிகளில், யூன் யூம் என்னும் வடிவங்கள் முதல் திரியாதும், நூன் நூம் என்னும் வடிவங்கள் தகர முதலாகத் திரிந்தும் வழங்கும்.

ந - த போலி. எ - டு: யுஷ்மத், யூயம் (வ.).you (E.); தூ, தும் (இ) thou (E).

(3) பழஞ்சுட்டுப் பெயர்

சேய்மை

படர்க்கைப் பெயர்.

ஆன் - தான் (ஒருமை)

ஆம் - தாம் (பன்மை)

அண்மை ஈ > ஈன் (ஒ), ஈம் (ப)

இடைமை ஊ > ஊன் (ஒ) - ஊம் (ப.).

இவை முன்னிலைப் பெயர்கள் தோன்றியபின் மறைந்தன.

வே.கு: தான் - தன். தாம் - தம்.

இ. ப : தாம் + கள் + கள் - தாங்கள்.

வே.கு: தாங்கள் தங்கள்.

சேய்மைச் சுட்டடியாய்ப் பிறந்த தான் தாம் என்னும் பெயர்கள் முதலாவது படர்க்கைப் பெயர்களாயிருந்து, பின்பு, சுட்டுப் பெயர்கள் தோன்றியபின் தற்சுட்டுப் (relexive) பெயர்களாயின. தாங்கள் என்பது இன்று பெருமதிப்புக் குறிக்க முன்னிலையில் வழங்குகின்றது. தான் என்னும் பெயரே ஆரிய மொழிகளில் தத், that என்று திரியும்.

த போலி. எ-டு: நுனி - நுதி. திருமான்

ஸ்ரீமத்.

மேலே கூறப்பட்ட மூவிடப் பெயர்களும் திணையும் பாலும் காட்டாமல் ஒருமை பன்மையாகிய எண் மட்டும் காட்டுவன. அவற்றுள் னகரவீறு ஒருமையையும் மகரவீறு பன்மையையுங் குறிக்கும். மகரவீறு கூடுதலைக் குறிக்கும் 'உம்' என்பதன் குறையென்பர் கால்டுவெல் அறிஞர். எ.டு: நீ + உம் - நீயும் – நீம். இனி, நீன் + உம் - நீனும் - நீம் என்றுமாம். னகர வீற்றின் வரலாறு தெரியவில்லை. ஆதியில் னகரவீறும் மகரவீறு மின்றி ஆ ஈ ஊ ஊ ஏ என நெட்டுயிர்களே ஈரெண்ணுக்கும் பொதுவான சுட்டு வினாப் பெயர்களாக வழங்கி வந்திருக்கின்றன.