பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

பின்னிணைப்பு II

வாய்ச்சைகை யொலிகளில் சுட்டாவொலிக்கு எடுத்துக்காட்டாக ஒன்றை இங்குத் தருவாம்.

உம் என்னும் சொல்

குவிதற் கருத்து : உகரத்தை ஒலிக்கும்போது உதடு குவியும். மகரத்தை யொலிக்கும்போது வாய் மூடும். ஆகவே, உம் என்று ஒலிக்கும்போது வாய் குவிந்து மூடும். இது பேசா நிலையையும் குவிவையுங் குறிக்கும். பேசாதிருப்பவனை உம்மென்றிருக்கிறான் என்பது வழக்கு.

உம் ஊம் (பொ.பா.). வாய் குவிந்த (வாய் மூடின) ஆள், பேசாத ஆள்.

ஊம்

ஊமன் (ஆ. பா.) ஊம்

ஊமை (பொ. பா.).

உம்

உமி - உமிழ் = வாய் குவிந்து துப்பு. உம்

உம்பு - உம். பல் = குமிழ்.

உம்

உமி = குவிந்த கூலவுறை.

உம் - கும் = குவி, கூடு, திரள். கும் + அல் - கும்மல்.

L. cumulus, a heap.

கும்மலிடு. L. cumulatum, E. cumulate.

கும்ம = கூட. L. com, cum, sim; Skt. sam, Gk. ham, syn; E. com, con, syn (pfxs.), together (to gether), Gk. hama, together.

கும்மி = கைகுவித்துக் கொட்டும் கூத்து. கும்மி - குப்பி - கொப்பி. குமுதம்

-

= பகலிற் குவியும் பூ. கும்மு = ஆடையைக் கைகுவித்துத் துவை. குமை = துவை. குமுக்கு = கை குவித்துக் குத்து, ஆடையைக் கும்மு. குமுங்கு = குத்துண்டு மசி. கும் - குமர் = திரட்சி, இளமை, இளம்பெண், அழியாமை. குமர் + அன் - குமரன் குமாரன் (வ.); குமர் + இ குமரி - குமாரி (வ.)

ஒ.நோ: விடை = பருத்தது, இளம்புள், இளவிலங்கு; விடை

இளங்காளை, இளைஞன், மறவன் (வீரன்).

Cf. E. virgin. from Gk. orgao, to swell.

விடலை

=

குமரன் = இளைஞன், முருகன், மகன். குமரி = இளைஞை, காளி, மகள். கும்மிருட்டு = திண்ட இருள்.

கும் - குமி - குவி. குவி - குவ குவி. குவி - குவ - குவவு = திரட்சி. குவ - குவல் - குவால்

= குவியல். குவி - குவடு - கோடு = குவிந்த சிகரம், மலை. குவி = உட்குவிவு.

குவை

குகை