பின்னிணைப்பு
75
பின்னிணைப்பு III
குறிப்பொலிகளும் குறிப்புச் சொற்களும் (Onomatopoetics and Frequentatives)
(1) ஒற்றைக்கிளவி. எ-டு: சடார், வெள்ளென, சரட்டென்று, பொதுக்கென்று.
(2) இரட்டைக் கிளவி. எ-டு : கலகல. சுருசுரு. மடமட்.
(3) எதுகைக் கிளவி. எ-டு : சட்டுப்புட்டு (சட்புட்), சடுகுடு, ஆலே பூலே, காமாசோமா.
(4) அடுக்குக் கிளவி. எ-டு: பட்டுப்பட்டு (பட்பட்), கதக்குக் கதக்கு, கணீர் கணீர்.
(5) இரட்டித்த கிளவி. எ-டு : செக்கச்செவேர், கன்னங்கரிய.
குறிப்பு: (1) இங்குக் கூறிய கிளவிகளெல்லாம் எனவென் னெச்சமும் என்றென் னெச்சமுமாகும்.
(2) வெள்ளென, சுருசுரு முதலிய சொற்கள் சுட்டடித் தோன்றி யவை: சடார், கலகல முதலியவை ஒலியடித் தோன்றியவை. (3) அடிஅடியென் றடித்து, குறுகுறு நடந்து என்பவை இக்காலத்தில் அடுக்குத்தொடர்களாயிருப்பது போல, மினுமினு, கலகல என்பவும் முதற்காலத்தில் அடுக்குத் தொடர்களா யிருந்தன.
(4) வெடி, குத்து முதலிய சொற்கள் சுட்டும் ஒலியுமாகிய ஈரடிப் பிறப்பின.