பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

xi

தொடர்ச்சொற்களையும் பட்டியெடுத்து அவற்றை (1) தனிச் சொல்லும் கூட்டுச்சொல்லும் (Simple and Compourd words), (2) மரபுதொடர்மொழிகள் (idioms and Barases), (3) இணைமொழிகள் (Words in Pairs) என மூவகையாகப் பாகுபடுத்தி, அவற்றுள் 2500 தனிச்சொற்களும் கூட்டுச்சொற்களும் ஆங்கிலத்திலும் தமிழிலும் அகராதி முறையிற் பொருளெழுதிக் கொடுத்தும் மேற்கொண்டு ஓராண்டிருந்து யான் மேற்கொண்ட வேலையை முடி முடிக்கா வண்ணம், என் அறுபதாம் அகவை முடியுமுன்னரே, கல்வியாண்டுத் தொடக்கத்தில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தினின்று விலக்கப்பட்டு விட்டேன்.

வென்று தம்பட்டமறையும்

அறிவாராய்ச்சி மிக்க இக்காலத்தில், தமிழ்நாடு முழு விடுதலையடைந்து விட்டதாகத் தருக்கி மிகழும் இக்காலத்தில், தமிழாட்சியும் தமிழ்வாயிற் கல்லூரிக் கல்வியும் வந்துவிட்டன இக்காலத்தில், தகுதிபற்றியே வேலையளித்தல் வேண்டுமென்று மிகுதியாகக் கூக்குரலிடும் க்காலத்தில், தமிழாக்கத்திற் கின்றியமையாததும் என்னையன்றி வேறெவரும் செய்யவியலாததுமான தென்சொல் தொகுப்பை சென்னைப் பல்கலைக்கழகத்திலன்றித் தமிழ் வளர்ச்சிக்கென்றே ஏற்படுத்தப்பட்டதாகச் அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலும் செய்தற்கிடமின்றேல், தமிழுக்குத் தமிழ் நாட்டிலும் இடமில்லையென்றே தெரிய வருகின்றது.

சொல்லப்படும்

புக்கி லமைந்தின்று கொல்லோ சிலரிடைத்துச்சி லிருந்த தமிழ்க்கு!

புலவரும் பொதுமக்களும், தமிழுக்கு இலங்கையிற் போன்றே இத் தென்நாட்டிலும் ஏற்பட்டுள்ள இரங்கத்தக்க நிலையை நோக்கி, என்றுமுள தென் தமிழ்' என்னும் கம்பர் கூற்றுப் பொய்க் காவண்ணம், தமிழ் தமிழாதற்கும் இன்றுந் தமிழாயிருத்தற்கும் விரைந்து ஆவன செய்வாராக!

20.8.1961

புதுவை

ஞா. தேவநேயன்.