பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




I சொல்வழுக்கள்

1. சொல்லின்மை

சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் முப்பெருங்குறைகளுள், முதலது பல்வகைச் சொல்லின்மையாகும்.

எடுத்துக்காட்டு:

(1) தனிச்சொல்

அமுக்கலான், பெ. ஒரு மருந்துச்செடி.

அரணை, பெ. எகிர்.

இள-த்தல், வி. மென்மையாதல்.

உரம்பு, பெ. ஒரு பூண்டு.

ஊதி, பெ. இசைக்குழல்

கருத்தை, பெ. கரிய பெண் அல்லது காளை.

காம்பு-தல்,வி. அரிசி, பயிறு, முதலிய உணவுப்பொருள்கள் நீண்ட

நாட்குப்பின் சுவையற்றுப்போதல்.

குமுறி, பெ. ஒருவகைப் புறா.

குன்னு-தல், வி. ஒடுங்கியிருத்தல்.

கூந்தை, பெ. நுங்கெடுத்த பனங்காய்.

சிலுப்பி, பெ. சிறு மத்து.

சிவத்தை, பெ. சிவப்பாயிருக்கும் பெண் அல்லது காளை.

சின்னான், பெ. சிறுவன், சில்லாளி.

தக்கட்டி, பெ. ஒருவகைச் சிறுகனி, கணபட்டையில் வரும் சிறு கட்டி (Sty).

தகைப்பு, பெ. யாழின் ஓர் உறுப்பு.

தொளுமான், பெ. ஒருவகை மீன்.

நாங்கள், த. ப. பெ.

நெக்கினி, பெ. ஒருவகை மரம்.

நோங்கு தல், வி. ஓரிடத்துக்குப் போகுமாறு உள்ளத்தால்

அதை நோக்குதல்.