பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

எ-டு:

அண்ணாக்க, மேலாக.

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

அண்ணாக்கக் குடித்தான், மேலாக எடுத்தான் என்னும் வழக்குகளை நோக்குக.

4. கூட்டுச்சொல்லின் உறுப்பைத் தனியாகக் கூறாமை

அண்டிதள்ளுகை,

அண்டிமாங்கொட்டை, எகிர்க் கொழுப்பு,

தொண்ணைத்தடி என்னும் கூட்டுச்சொற்கள் அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளன. ஆயின், அண்டி (anus), அண்டிமா (முந்திரி), எகிர் (அரணை), தொண்ணை (பருமன்) என்னும் தனிச்சொற்கள் குறிக்கப்படவில்லை.

5. மிகைபடு சொற்கள் (Redundant Words)

சில சொற்கள் மிகைபடு சொற்களாயினும், உலக வழக்கில் வழங்கத்தான் செய்கின்றன. அவற்றையும் அகராதியில் குறித்தல் தக்கதே. ஆயின், அவற்றுட் பல குறிக்கப்படவில்லை.

எ.டு:

அரைஞாண் கயிறு

அரைஞாண் கொடி

ஆண்பிள்ளைப் பிள்ளை

பெண்பிள்ளைப் பிள்ளை

இவை, முறையே, அரணாக்கயிறு (அண்ணாக்கயிறு), அரணாக்கொடி, ஆம்பிளப்பிள்ளை, பொம்பிளப்பிள்ளை எனக் கொச்சைவடிவில் வழங்குகின்றன.

இவ் வடிவைக் குறித்தல் கூடாது. இவற்றின் திருந்திய வடிவைக் குறிக்கலாம். சாவல் (சேவல்),வேங்கு (வாங்கு) முதலிய கொச்சை வடிவுகளை வேண்டாது குறித்திருக்கும்போது, மிகைபடு சொற்களின் திருந்திய வடிவை ஏன் குறித்தல் கூடாது?

6. விளக்க மேற்கோளில் வருஞ்சொல்லைக் குறியாமை

சில சொற்கள் விளக்கமேற்கோளில் வந்திருக்கின்றன. ஆயினும், அவற்றைக் கண்டுபிடித்து அகராதிச் சொல்வரிசையில் சேர்த்திலர்.

எ.டு:

உடும்போடி - உடும்பு ஓடினதினால் ஆகாதென்று தள்ளிய நிலம். குறித்துவருகிளவி புணர்மொழியில் வருமொழி.

சிறிய திருவடி – - அனுமான்.

ஆமைதவழி என்னுஞ் சொல்லை விளக்கும் மேற்கோள் "உடும்போடி ஆமைதவழி புற்றும்” என்பது. நிறுத்த சொல் என்பதை விளக்க வந்த மேற்கோள் நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவி என்று” என்பது. பெரிய திருவடி

66