பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல் வழுக்கள்

11

திரு. வையாபுரிப் பிள்ளை, வேலூர் மகிழ்நனார் ஒருமுறை பாடப் பொத்தகக்குழு வொப்பத்திற்கு விடுத்த ஐந்தாம் வகுப்புப் பொத்தகத்தில் இருந்த பைம்புல்வெளி என்னுஞ் சொல், சிறுவர் வாயில் நுழையாதென்று அப் பொத்தகத்தைத் தள்ளிவிட்டாராம். ஆயின், அவர், பெரியோர் வாயிலும் நுழையாத ரக்திஷ்டீலி, சந்நிபாதசுரம், பரியது யோச்சியோ பேக்ஷணம், ஜஹத ஜஹல்லக்ஷனை, ஸ்படிசஜபாகுஸும நியாயம் என்னுஞ் சொற்களை, எந்த வகையில் அகராதியிற் சேர்த்தாரோ தெரியவில்லை. இவற்றையெல்லாம் சமற்கிருத அகராதியி லன்றித் தமிழகராதியிற் குறித்தல் கூடாது.

(3) ஈரெழுத்திலும் வேற்றுச்சொல் (சமற்கிருதம்)

வேற்றெழுத்துச்சொல்

தன்னெழுத்துச்சொல்

அசகசாந்தரம்

அசாக்கிரதை

அசாகளத்தனம்

அட்டகம்

அட்டதிக்கயம்

அட்டதிக்குப்பாலகர்

அட்டபந்தனம்

அட்டபந்தனம்

அஜகஜாந்தரம்

அஜாக்கிரதை

அஜாகளஸ்தனம் அஷ்டகம்

அஷ்டதிக்கஜம்

அஷ்டதிக்குப்பாலகர்

அஷ்டதிக்கஜம்

அஷ்டபந்தனம்

அட்டமச்சனி

(4) பல்வடிவு வேற்றுச்சொல்

அஷ்டமச்சனியன்

இராக்கதன், இராட்சசன், ராட்சதன், ராக்ஷஸன். இருடி, ரிஷி, ருஷி.

இலக்குமி, இலட்சுமி, லட்சுமி, லக்ஷ்மி.

சட்டி, சஷ்டி, ஷஷ்டி.

சபாசு, சவ்வாசு, சவாசு, சபாஷ், ஷபாஷ், ஸபாஷ்.

சிருவை, ஜிஹ்வா, ஜிஹ்வை.

பாசை, பாடை, பாஷை.

ராக்கடி, ராக்கிடி, ராக்குடி, ராக்கொடி, ராக்கோடி.

ருப்பு ருப்பு, ரூப்ரூ, ரூப்ரூப்.

ஜிராயத்து, ஜிராயதி, ஜிராயித்.

இங்ஙனம், பல வேற்றுச்சொற்கள் பலவடிவிற் குறிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மிகுந்த சொல்வளமுள்ள மொழியாதலால், அதற்கு மேற்காட்டிய

சொற்கள் தேவையேயில்லை. தேவையில்லாது பிறமொழிச் சொற்களைக் கடன் கொள்வதால், தமிழ் தன் தூய்மையும் சிறப்போசையும் இழந்து கலவை மொழியாவதுடன், நாளடைவில் திரவிட மொழிகள்போல் ஆரிய வண்ணமாய் மாறிவிடும். வேற்றுச்சொற்கள் வழங்கும்போது, தன் சொற்கள் வழக்கற்றுப் பொருளிழப்பதுடன், நாளடைவில் மறைந்துபோய் மீளாநிலை யடைகின்றன.