பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருள் வழுக்கள்

19

99

வள்ளி என்பது கொடி; வளைந்தது என்னும் பொருளது. ஒப்புநோக்க கொடு-கொடி. கொடுமை=வளைவு. “ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் என்னும் புறப்பாட்டிக்கு, “ஆம்பற்றண்டாற் செய்த வளையணிந்த கையினை யுடைய மகளிர்” என்று பழையவுரையாசிரியர் உரைத்திருத்தல் காண்க. தொடி என்பதே வளையல். இதைக் கவனியாத சென்னை யகராதித் தொகுப்பாளர், வள்ளியென்னுஞ் சொற்கு வளையல் என்று பொருள் குறித்துள்ளனர்.

வரால் என்னும் சொற்கு,கெண்டை யென்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. வரால்மீன் வேறு; கெண்டைமீன் வேறு.

இனி, வரால் 3 அடியும் 4 அடியும் வளரும் என்று கூறியிருப்பது வியப்பையும் நகைப்பையும் விளைக்கின்றது.

"தானே தரக்கொளி னன்றித் தன்பால்

மேலிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை

99

(நன். 33)

என்று, மாணவர் விரும்பும்போது ஒன்றைச் சொல்லாமல் தாமாக விரும்பும் போது அதைச் சொல்லும் ஆசிரியர்க்கு, தானாகக் காற்றடித்து விழுந்தாலன்றி ஒருவன் விரும்பும்போது ஏறிப் பழம் பறித்துக்கொள்ளமுடியாத கருக்கு மட்டையறுக்காத பெண்பனையைத் தெளிவாக உவமை கூறியிருக்கவும், அதை ஆண்பனை யென்று நூற்பாவையும் காட்டிக் குறிப்பது எத்துணைப் பொறுப்பற்ற செயலாகும்.

5. சில பொருள் கூறப்படாமை

பல சொற்கட்கு உரிய பொருள்களுள் ஒன்றும் பலவும் கூறப்படவில்லை. இக் குற்றத்தை அகராதி நெடுகலும் பார்க்கலாம்.

சொல்

அச்சி அடைதல்

(செ. குன்றா. வி.) இந்த மரம் கலப்பைக்காகும்.

உடக்கு

எங்கே

ஒடியல்

குறிக்கப்படாத பொருள்

அக்கை.

களிமண் சாணம் முதலியவற்றை மொத்தமாகச் சேர்த்துவைத்தல்.

ஆதல் பயன்படுதல்.

(1) தோலுடன் கூடிய எலும்புக்கூடு,

(2) செயற்கையுடல்.

குதிரையுடக்கு (பொய்க்குதிரை).

(1) போல.

இவன் இவனுடைய அப்பனெங்கே

யென்றிருக்கிறான்.

(2) இருவரிடை மிகுந்த வேறுபாடுண்மையை

உணர்த்தும் குறிப்பு.

அவன் எங்கே? இவன் எங்கே?

(3) பிறர் பொருளைக் கவரும் இடம் தேடுதற் குறிப்பு.

எங்கே யென்று அலைகிறான்.

வறுத்து அவிக்கும் முறை.