பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேர் வழுக்கள்

27

சொல்லைத் தழுவினதெனின், வடநாட்டு இந்திச் சொல் (hazar) ஏன் அதைத் தழுவவில்லை? மலையாளத்திலும் குடகிலும் ஆயிரம் என்னும் தமிழ் வடிவே உள்ளது. ஆதலால், சாவிர என்பது திரவிட வடிவே. சாஹிர என்னும் வடிவே ஸகஸ்ர என்பதன் திரிபாய் இருக்கமுடியும். அதற்கும் அடிப்படை ஆயிரமே. ஆம்பல் (ஏறத்தாழ 565 கோடி), தாமரை (ஏறத்தாழ 4522 கோடி), வெள்ளம் (ஏறத்தாழ 21 இலக்கங் கோடி) என்னும் பேரெண்கள் வழங்கிய தமிழனுக்கா ஆயிரத்தைக் குறிக்கச் சொல்லில்லை?

உலம் = உருட்சி, திரட்சி, உருண்ட கல்.

உலம்வா - உலமா. உலமருதல் = சுழலுதல், உழலுதல்.

உலக்கை = உருண்டு நீண்ட (பூண்கட்டிய) பெருந்தடி. உலண்டு = உருண்டு நீண்ட புழு.

உலம்-உலவு. உலவுதல் = சுற்றுதல், திரிதல்.

உலவை = சுற்றி வீசுங் காற்று,

உலா = சுற்றி வருதல், அரசன் வலமாகச் சுற்றிவருகை, அதைப் பாடிய பனுவல்.

உலாவுதல் = சுற்றித்திரிதல்.

உலாத்துதல் = சுற்றித்திரிதல். உலாஞ்சுதல் = தலை சுற்றுதல்.

உலம்

-

உலவு உலகு. ஓ.நோ: புறம் - புறவு புறகு

உலகு = உருண்டையானது. உலகு உலகம்.

அண்டம், கோளம், globe, sphere முதலிய பிற அல்லது பிறமொழிச் சொற்களும், உருட்சிபற்றி உலகத்தைக் குறித்தல் காண்க.

உலகம் என்பது உலகத்திலுள்ள மக்களை அல்லது உயர்ந்தோரைக் குறிப்பது இடவாகுபெயர் என்றறிக.

உலகம் என்பது வடமொழியில் லோக்க (loka) என்று திரியும். அதற்கு லோக் என்பதை வேராகக்கொண்டு, பார்த்தல் (look) என்னும் பொருள் கூறப்பட்டுள்ளது (M.S.D). ஆகவே, லோக்க என்பதற்குப் பார்க்கப்பட்ட இடம் என்பது இரண்டாம் பொருளாம். இது பொருந்துமா வென்பதை அறிஞர் கண்டுகொள்க.

ஐயன் என்பது வியக்கத்தக்க பெரியோன் என்று பொருள்படும் தமிழ்ச் சொல். இது ஐ என்றும் நிற்கும். "என்ஐமுன் நில்லன்மின்" (குறள்.771)

୧୯

ஐவியப் பாகும்”. என்பது தொல்காப்பியம் (868)

ஐ+அன்= ஐயன், கடவுள், அரசன், தந்தை, தாய், அண்ணன் என, ஒருவர்க்கு ஐந்து பெரியோர் உளர். அவர்கட்கெல்லாம் ஐ என்னும் பெயர், அல்லது அதனின்று திரிந்த பெயர் பொதுவாம். தாயைக் குறிக்கும்போது ஐயை என்று திரியும். அண்ணனைக் குறிக்கும்போது தமையன் (தம்+ஐயன்) என்று அமையும்.