பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேர் வழுக்கள்

29

சிறுசொல்லை வடசொல்லாக் கருதினும், அல்லது காட்ட விரும்பினும், உடனே உடுக்குறி யிட்டுவிடுவது வழக்கமா யிருந்திருக்கின்றது.

எ-டு: அகப்பாட்டுவண்ணம், அட்டிற்சாலை, அடுகளம், அரங்கேற்றம், அரசரறுதொழில், அவையல்கிளவி, ஆழிவலியான் மணி, இராப்பள்ளிக்கூடம், ஈரற்பித்து, இருப்பாணி, ஈமத்தாழி, உண்ணாழிகை வாரியம், உதவாக்கட்டை, உம்பருலகு. உரைகாரர், உவகைமுத்து, உவமையாகுபெயர், ஊசற்பயற்றுக்காரி, ஊர்க்கணக்கன்.

இனி, உம்பரார், உயர்ந்தவன் என்னும் இம்மியும் ஐயுறவிற் கிடமில்லாத தென்சொற்கட்கும் உடுக்குறியிட்டிருப்பதும், பிழைதிருத்தப்பட்டியில் அவற்றைக் குறியாதிருப்பதும், தொகுப்பாளர் கண்மூடிக்கொண்டு வேலை செய்த கவலையற்ற தன்மையையே காட்டுகின்றது.

2. சொல்வேர் காட்டாமை

பேசுங்குழந்தைகளும் சிறு பிள்ளைகளும் ஏதேனு மொன்றைக் கண்டு அஞ்சினும், வியக்கினும், இரங்கினும், தம் பெற்றோரை விளிப்பது வழக்கம். இதை அடிப்படையாகக் கொண்டு, பெற்றோரைக் குறிக்கும் பல பெயர்கள் அச்சம், வியப்பு, இரக்கம் முதலியனபற்றிய குறிப்புச்சொற்களாகத் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன. இவையெல்லாம் ஒரேயொழுங்காகவும் தெளிவாகவும் இருப்பினும், இவற்றை அகராதித் தொகுப்பாளர் பெற்றோர் பெயரடிப் பிறந்தனவாக ஓரிடத்திலும் எடுத்துக்காட்டியிலர்.

குறிப்புச்சொல்

அக்கே, அக்கோ, அகோ அச்சோ

அத்தோ, அந்தோ

எ.டு:

பெற்றோர்பெயர்

அக்கை

அச்சன்

அத்தன்

அப்பன்

அப்பா

அம்மை

அன்னை ஐயன்

வழுவேர் காட்டல்

அம்ம, அம்மவோ, அம்மகோ, அம்மா,

அம்மனையோ, அம்மே, அம்மோ

அன்னே, அன்னோ

ஐய, ஐயவோ, ஐயகோ, ஐயா, ஐயே, ஐயோ

கோவணம் என்னும் வடசொற்கு நேர் தென்சொல் குளிசீலை, தாய்ச்சீலை, நீர்ச்சீலை என்பன. குளிசீலை என்பது குளிக்கும்போது கட்டிக்கொள்ளும் துணி என்று பொருள்படுவது. இதைக் குழிசீலை என்ற வடிவிலும் காட்டி, குழி என்பதை, குழியாக்குதல் அல்லது செதுக்குதல் என்று பொருள்படுஞ் சொல்லாகக் குறித்திருக்கின்றது. சென்னையகராதி.

தக்காளி என்பது, மணித்தக்காளி, எருமைத்தக்காளி, சீமைத்தக்காளி எனப் பலதிறப்படும். இவற்றுள் மிகச் சிறியது மணித்தக்காளி. மணி என்பது