பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

சிறுமைப்பொருள் உணர்த்தும் முன்னொட்டு. மணிக்கயிறு, மணிக்காக்கை, மணிக்காடை, மணிக்குடல், மணிப்பயறு, மணிப்புறா என்னும் சொற்களை நோக்குக. சென்னையகராதி, மணித்தக்காளி என்பதை மணத்தக்காளி எனத் தவறான வடிவிலுங் குறித்ததோடமையாது. அதையே மூலமாகவும் கொண்டு மணமுள்ள தக்காளி எனப் பொருள் கூறியிருக்கின்றது.

தேங்காய் திருகியைத் தேங்காய் துருவி எனக் குறித்துத் தேங்காய் துருவுங் கருவி எனப் பொருட்காரணங் காட்டுகின்றது சென்னையகராதி. திருகு சுறண்டியெடுத்தல். துருவுதல்-ஊடுருவுதல்.

ஆமைவடை யென்பதை வடசொல்லாகக் காட்டவேண்டி, 'ஆமை'யை என மாற்றி, நன்றாய் வேகாதது எனப் பொருள் கூறியுள்ளனர் அகராதியாளர். நன்றாய் வேகாத வடையை நாள்தோறும் சுடுவாரும் விற்பாரும் தின்பாரு எத்துணைப் பேதையராய் இருத்தல் வேண்டும்!

4. ஐயுற்றுக் கூறல்

பகுதி அல்லது பிரிவு என்று பொருள்படும் பால் என்னும் சொல்லிற்கு பகு என்பதும், மருமகனை அல்லது வழிவந்தோனைக் குறிக்கும் மருகன் என்னும் சொல்லிற்கு மரு (மருவு) என்பதும், தெளிவான மூலமாய் அல்லது பகுதியா யிருந்தும், ஒருகால் (perhaps) என்றும், மெய்வாய்ப்புள்ளதா (probably) என்றும், அடைகொடுத்து உண்மையின் திண்மையைக் குறைத்திருக்கின்றனர்.

வேந்தன் என்னும் தூய தென்சொல்லைத் தேவேந்தர் என்பதோடும், மருந்து என்னும் தனித்தமிழ்ச்சொல்லை அம்ருத என்பதோடும், ஒப்பு நோக்குமாறு குறும்புத்தனமாய்க் குறித்திருக்கின்றது சென்னையகராதி.

வேய்ந்தோன் (முடியணிந்தோன்)

தேவேந்திரன்.

வேந்தன், தேவ + இந்திரன்

மருந்து - சிறப்பான மணமுள்ள தழை அல்லது சரக்கு. மரணத்தைத் தவிர்ப்பது என்று சொல்லப்படுவது.

அம்ருத

-

5. தலைமாற்றிக் கூறல்

குமரிக்கண்டத் தமிழ் வடக்கே சென்று திரவிடமாய்த் திரிந்தது. வடகோடித் திரவிடம் நாளடைவில் பிராகிருதமாய் மாறியது. வேத காலத்தில் விந்திய மலைக்கு வடக்கில் பைசாசம், சூரசேனம், மாகதம் என மூன்று பிராகிருதங்களும், அதற்குத் தெற்கில், தமிழ், ஆந்திரம் (தெலுங்கு), கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்னும் ஐந்துதிரவிடங்களும் (பஞ்சதிராவிடம்) வழங்கி வந்தன. பிற்காலத்தில், ஐந்திரவிடங்களுள், மகாராட்டிரம் ஒரு பிராகிருதமாகவும், தமிழ், கன்னடம், தெலுங்கு மூன்றும் சேர்ந்து (திராவிடீ என்னும்) ஒரு பிராகிருதமாகவும் கொள்ளப்பட்டன. மாகதத்தின் பிற்காலத் திரிவு பாலி. பிராகிருதம் என்னுஞ் சொல் தமிழில் பாகதம் எனத் திரியும்.

"