பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேர் வழுக்கள்

9. தொழிற்பெயரின் திரிபே முதனிலையெனல்

33

பொதுவாக, முதனிலையினின்றே தொழிற்பெயர் திரிக்கப்படும் ஆயின், சென்னை யகராதி தொழிற்பெயரினின்று முதனிலையைத் திரிக்கின்றது.

எ-டு: நடம் > நடி.

இதற்குக் காரணம், நடி என்னும் சொல்லை காட்டவேண்டும் என்பதே.

வடசொல்லாகக்

நள்-நளி, நள்ளுதல் = பொருந்துதல். 'நளிய’ ஓர் உவம வுருபு.

நளிதல் = ஒத்தல். நளி-நடி. ஒ.நோ: களிறு - கடிறு.

நடித்தல் = ஒத்துச் செய்தல்.

நடி+அம் = நடம். ஒ.நோ. குறி+ அம் = குறம்.

நடம்-நட்டம்-நட்ட (பி.) - ந்ருத்த (வ.).

ஒ.நோ: படம்-பட்டம் = துணி.

ஒ.நோ: வள்-வட்டு-வட்டம்-வட்ட (பி.)-வ்ருத்த (வ.).

நட்டம்-நட்டணம், நட்டணை, ஒ.நோ: வட்டம்-வட்டணம், வட்டணை.

நட்டம்- நட்டவம்-நட்டுவம்-நட்டுவன்.

"நட்டவஞ் செய்ய நட்டவம் ஒன்றுக்கு... பங்கு" (S.I.I. ii, 274).

ஒ.நோ: குட்டம்-குட்டுவன்= குட்ட நாட்டான், சேரன்.

நடு என்னுஞ் சொல்லொடுகூடி, நட்டுவம் என்பது நட்டு எனக் குறுகிற்று. முட்டு = நட்டுவ இசைக்கருவிகள். நட்டுமுட்டுவர் = நட்டுவ மேளகாரர்.

நடி+ அனம் = நடனம், ஒ.நோ: படி + அனம் = படனம்.

நடனம் நடலம் (கொச்சை).

நடி+அகம் = நாடகம். ஒ.நோ: படி + அகம்= பாடகம்.

தலைக்கழகக் காலத்திலிருந்து, தமிழ் இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வழங்கி வந்திருக்கின்றது. இயல், இசை என்பன போன்றே, நாடகம் என்பதும் தமிழ்ச்சொல். கூத்து என்னும் வேறொரு சொல்லிருப்பதால் மொழி யாராய்ச்சி யில்லாதாரும் தென்சொல்வளத்தை யறியாதாரும், நாடகம் என்பதை வடசொல்லெனக் கருதுகின்றனர். கால்டுவெல் கண்காணியார் தமிழின் சொல் வளத்தை விளக்கவந்த விடத்து, "தமிழ் தனக்கே யுரிய வீடு என்னுஞ் சொல்லோடு, தெலுங்கில் வழங்கும் இல் என்னுஞ் சொல்லையும், கன்னடத்திற் சிறப்பாய் வழங்கும் மனை என்னுஞ் சொல்லையும், சமற்கிருத்ததிலும் பின்னிய (Finnish) மொழிகள் எல்லாவற்றிலும் வழங்கும் குடி என்னுஞ் சொல்லையும், தன்னகத்துக் கொண்டுள்ளது” என்று கூறியிருத்தலை நோக்குக.

நட்ட என்னும் பிராகிருத வடிவினின்று நாட்டிய(ம்) (நாட்ய) என்னும் வட

சொல்லை வடவர் அமைத்துக்கொண்டு, ந்ருத்த என்னும் வடிவின் முதலசையாகிய ந்ருத் என்பதையே, நடி என்னும் பகுதியினின்று தோன்றியுள்ள