பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

VII. அகராதியாசிரியர் குறைகள்

சென்னைப், பல்கலைக்கழகத் தமிழ் அகராதியைத் தொகுத்த ஆசிரியருள் தலைமையான பொறுப்பு வாய்ந்தவர், அகராதிப் பணிக்குழுவின் தலைமைத் தமிழ்ப் பண்டிதரான பெரும்புலவர் மு. இராகவையங்காரும் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப் பிள்ளையும் ஆவர். மறைமலையடிகளும், தமிழ் வடமொழித் துணை அல்லது பிறமொழித் துணை வேண்டாத தனிமொழியென்னுங் கொள்கை யினரும், அகராதியாசிரியர் குழுவிற் சேர்க்கப்படவேயில்லை.

1. தமிழ்ப் பற்றின்மை

திரு. வையாப்புரிப் பிள்ளை இருபதாம் நூற்றாண்டுக் கொண்டான் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது சிறந்த ஆராய்ச்சியெல்லாம், தென்சொல்லை வடசொல் என்பதும், தென்னூலை வடநூன் மொழிபெயர்ப் பென்பதும், தமிழ்க்கலையை ஆரியக்கலை யென்பதுமே. அவர் வடமொழி யறிஞர்தாம். பின் வடசொல் தென்சொல் வேறுபாடறியும் மொழிநூலறிஞரல்லர். பெரும்புலவர் மு. இராகவையங்கார், “செட்டி மக்கள் வாசல்வழி” என்னும் கம்பர் வெண்பாவில், 'முட்டிபுகும் பார்ப்பார்' என்னும் தொடரில், முட்டி புகும்'என்பதை ‘இட்டமுடன்’ என்று மாற்றியவர்; “ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்னும் தொல்காப்பிய அடியில் வரும் 'ஐயர்' என்னுஞ் சொல்லுக்கு 'ஆரிய மேலோர்' என்று பொருளெழுதியவர். பட்டயப் பாவலர் வரலாறு என்று பெயரிடக்கூடிய தம் வெட்டெழுத்துப் புலவர் வரலாற்றிற்குச் சமமான தமிழ்க்கவி சரிதம் எனப் பெயரிட்டவர்.

2. தவறான கருத்துடைமை

இவ் விருவரும், தமிழ் வடமொழி வழியதென்று தவறான கருத்துடையவர். 3. கவனமின்மை

இருவரும், ஏறத்தாழ 750 அச்சுப்பிழைகள் நேரவிட்டும், அவற்றுள் மட்டும் பிழைதிருத்தப்பட்டியிற் காட்டியும், பிந்தித் தொகுத்த சில சொற்களைப் பின்னிணைப்பு மடலத்திலும் சேர்க்காதும், கவலையற்றும் கவனமின்றியும் அகராதியை வெளியிட்டவர்.

4. சொற்றொகுப்பு முறையறியாமை

இருவரும் முதற்கண் சொற்றொகுக்கும் முறையை அறியாது, வின்சிலோ அகராதியையே அடிப்படையாக வைத்துக்கொண்டு வேலை செய்து வந்தனர்.