பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அகராதியாசிரியர் குறைகள்

39

பின்னர், பண்டைத் தமிழிலக்கியத்தில் பன்னூற்றுக் கணக்கான சொற் களுடைமையையும், அதன்பின்னர், உலகவழக்கில் ஆயிரக்கணக்கான சொற்களுண்மையையும், தாமாகவும் பிறர்க்காட்டவும் கண்டுகொண்டு, அவற்றையெல்லாங் தொகுத்தனுப்பும்படி பல கழகங்களையும் தனிப்பட்ட அறிஞர்களையும் வேண்டி இலவசமாகப் பேருதவி பெற்று வந்தனர்.

அதன்பின்பும், நெடுஞ்சினை, சினைமுதற்பெயர், வண்ணச்சினைச் சொல் தடுமாறு தொழிற்பெயர் முதலிய தொல்காப்பியச் சொற்களும்; அந்தரக்கோல், கண்ணெழுத்து, பண்மொழி நரம்பு முதலிய சிலப்பதிகாரச் சொற்களும் தகைப்பு, புகுவாயில், புறப்படுவாயில் முதலிய அடியார்க்கு நல்லாருரைச் சொற்களும்; கருங்களமர், கருமுகமந்தி, செம்பினேற்றை முதலிய நச்சினார்க்கினியருரைச் சொற்களும்; இல்லற வெள்ளை, ஐம்படை விருத்தம், செந்தமிழ் மாலை, யானைத்தொழில், வேந்தன்குடைமங்கலம் முதலிய பன்னிரு பாட்டியற் சொற்களும்; கணக்குவாரியம், கலிங்குவாரியம், குடும்புவாரியம், தடிவழிவாரியம், பொன்வாரியம் முதலிய கல்வெட்டுச் சொற்களும்; நூற்றுக் கணக்கான உலக வழக்குச் சொற்களும், அகராதியில் இடம் பெறவில்லை. தமிழுக்கு வேண்டாத டர் (அச்சம்), லக்கிடி (விறகு) போன்ற இந்திச்சொற்கள் மட்டும் ஏராளமாய் இடம்பெற்றுள்ளன.

வின்சிலோ அகராதியை அடிமணையாகக் கொண்டிருந்தும், அதிலுள்ள பொருள்களைக்கூடச் சரியாய்ப் பெயர்த்தெழுதவில்லை.

எ-டு; “பன்னுகிறேன்.....

وو

4. To recite or interpret word by word விவரிக்க’ இவற்றையெல்லாம் நோக்கும்போது, தமிழைக் கெடுக்கவேண்டுமென்றே இருவருங்கூடி வேலை செய்தார்போலும், என்றெண்ண இடந்தருகின்றது.

கனம் சான்றிலர் (Rev. J.S. Chandler) துரைமகனார் முதல் நான்காண்டு அகராதிக்குழுத் தலைவரா யிருந்தபோது, பாம்பன் சென்று, துறைமுக அதிகாரியையும், தமிழ மீகாமரையும், செம்படவரையும் கண்டு, நாவாய்த்துறைச் சொற்களையும் அவற்றின் சரியான பொருள்களையும் கேட்டறிந்து வழிகாட்டியும், அதைப் பின்பற்றியிலர்.

5. தொல்காப்பியர் கூற்றைப் பிறழவுணர்தல்

தமிழ் வடமொழிக்கு முந்திய முழுவியற்கை மொழியாதலால் அதிலுள்ள எல்லாச் சொற்களும் வேர்ப்பொருள் கொண்ட கரணிய (காரண)க் குறிகள். சமற்கிருதம் தமிழுக்குப் பிற்பட்ட அரைச் செயற்கை மொழியாதலின், அதிலுள்ள சொற்களுள் ஒரு சாரன கரணியக் குறிகள்; ஒரு சாரன வேர்ப்பொருளற்ற இடுகுறிகள். திரு. வையாபுரிப் பிள்ளை வடமொழியடிப்படையில் தமிழ் கற்றவராதலின், தமிழ்ச்சொற்களுள்ளும் இடுகுறி யுண்டெனப் பவணந்தியார் கூறியதை நம்பியதுடன், தம் அறியாமையைத் தொல்காப்பியர்மீதும் ஏற்றி, அவர்