பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

சென்னைப் பல்கலைக்கழக அகராதியைத் திருத்துவது சேதுப் பிள்ளைக்கு விருப்பமன்று. அவ் வகராதி சென்னைப் பல்கலைக்கழகத்தைக் கடுங்கறைப்படுத்திய கருசெயல்வடிவாய் இருந்தும், அவர் அதை அப் பல்கலைக் கழகம் தமிழுக்குச் செய்த தலைசிறந்த தொண்டென்று அதன் வெள்ளிவிழாவிற் புகழ்ந்தார். இத்தகைய கருத்துடையவர் அதை யெங்ஙனத் திருத்த இசைவர்! அவர் கருதியபடியே அவர் காலமெல்லாம் அது திருத்தப்படாமற் போயிற்று.

சொல்

அணில்

வேந்தன்

பள்ளி

சேதுப்பிள்ளை யாராய்ச்சி அணி=அழகு, அழகான மூவரிகளை முதுகிலுடையது அணில் தீமையை நீக்குவதற்கு வெம்மையாகக் கோலோச்சுபவன் வேந்தன் வெம்மை, வேகு, வெயில் என்பனவும் வேந்தன் என்பதும் ஒருவேரினின்று பிறந்தவை

முதற்பொருள் இடம் என்பது, பிற பொருள்கள் பிந்தியவை.

அகவிலை அகவிலை ஏறிவிட்டது என்பதில், ‘அகவிலை' என்பது 'அதிகவிலை

என் ஆராய்ச்சி

அணி = வரி, வரிசை. முதுகிலுடையது அணில். வேய்ந்தோன்-வேந்தன் வேவு என்பதிற்போல் யகரமெய்தொக்கது. வேய் தல் = முடியணிதல். முதற் காலத்தில், தமிழ்நாட்டில் முடியணியும் உரிமை முத்தமிழ் வேந்தர்க்கேயிருந் தது. கொன்றை வேயந் தோன் கொன்றை வேந்தன்

முதற்பொருள் படுக்கை அல்லது படுக்கையறை என்பது, பிறபொருள்கள் பிந்தியவை.

அகவிலை என்பது அஃக விலை என்பதன் மரூஉ. அஃகம் = தவசம், கூலம்.

சேதுப்பிள்ளை ஒருமுறை அண்ணாமலை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு மண்டபத்தில் கல்வியமைச்சர் தலைமையில் பேசியபோது, மொழிநூலறிவின் இன்றியமையாமைக்குச் சிற்றம்பலம் சிதம்பரம் எனத் திரிந்ததை எடுத்துக் காட்டினார். இது சொல்லாராய்ச்சியின் (Etymology) ஒரு பிரிவான இடப் பெயராய்ச்சியே (Toponomy) யன்றி மொழியாராய்ச்சியன்று. மொழியாராய்ச்சி செய்யாதவர் சொல்லாராய்ச்சியில் இறங்குதல் கூடாது. இறங்கின், பல சொல்வேர்களைத் தவறாகக் காட்ட நேரும். சில வேர்கள் சரியாயிருப்பின் அவை எவரும் எளிதாய்க் கண்டுகொள்ளத்தக்கனவாயிருக்கும்; அல்லது, ஏரலெழுத்துப் போல் அமைந்தனவா யிருக்கும்.

இனி ஒருசில தமிழ்ப்பேராசிரியர், தாம் மொழிநூல் கற்றிருப்பதுபற்றி என் ஆராய்ச்சியை இகழ்வதாகத் தெரிகின்றது. கல்வி வேறு, ஆராய்ச்சி வேறு என்பதையும், என் கல்விப்பரப்பையும் ஆராய்ச்சியாழ்வையும், அவர் இன்னும் அறிந்திலர். அவர் உண்மையில் என்போன்று ஆராய்ந்தவராயின், சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் இல்லாச் சொற்களையும் இல்லாப் பொருள்களையும் உள்ள பிழைகளையும் எடுத்தெழுதுவாராக; அறைகூவி அழைக்கின்றேன்.