பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என் அண்ணாமலை நகர் வாழ்க்கை

55

நீண்டநாளாக ஒன்றும் தெரியாமையால், அண்ணாமலை பல்கலைக்கழக வேலையைப்பற்றி நான் ஐயுற்றுக் கொண்டிருந்தபொழுது, ஒருநாள் எதிர்பாராத நிலையில் துணைக் கண்காணகரிடமிருந்து அமர்த்தோலை வந்தது. ஓரளவு பசியடங்கினவன் பெற்ற உணவுபோல் அதைப் பெற்றுக்கொண்டேன். ஆயினும் துணைக்கண்காணகரின் அன்பார்ந்த முடங்கலும், தமிழ் வேர்ச்சொல்லகர முதலித் தொகுப்புப்பற்றிய எண்ணமும், இன்புறுத்தின. இவ் வின்பம் இரண்டொரு நாளே யிருந்தது. ஏனெனின், எனக்கு அண்ணாமலை பல்கலைக் கழகத்தினின்று வந்தவுணவு நஞ்சூட்டப்பட்டதென்பது பின்புதான் தெரியவந்தது.

அமர்த்தோலை வந்து இருநாட் சென்றபின், அதன் தொடர்ச்சியாக மற்றோர் ஓலை வந்தது. அதன் உறையைப் பிரித்துப் பார்த்தேன். என் அண்ணாமலை பல்கலைக்கழகப் பணியை மேற்பார்க்குமாறு,

1. வங்கச் சட்டமன்றத் தலைவரும் ஓய்வு பெற்ற சமற்கிருதப் பேராசிரியரும் மொழிநூலாசிரியருமான பண்டாரகர் சுநீதிக் குமார சட்டர்சி (தலைவர்).

2.

3.

4.

5.

பூனாப் பட்டக் கல்விப் பின்னை ஆசிரியப் பயிற்சி யாராய்ச்சித் தக்கணக் கல்லூரித் தலைவர் பர். கத்தரே,

மைசூர்ப் பல்கலைக்கழகக் கன்னடத் துறைத்தலைவர், பேராசிரியர், சீகண்டையா,

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர். சேது,

சென்னை மண்டலக் கல்லூரி ஓய்வு பெற்ற தலைமைத் தமிழ்ப் பேராசிரியர், தெ.பொ. மீனாட்சிசுந்தரம்,

6. சென்னை மண்டலக் கல்லூரிச் சமற்கிருதப் பேராசிரியர் திருஞானசம்பந்தம்,

7.

8.

9.

அண்ணாமலை பல்கலைக்கழகக் கீழைக்கலைத் தமிழ்த் தலைவர், பேராசிரியர், இலெ.பெ.கரு இராமநாதன்,

அண்ணாமலை பல்கலைக் கழகக் கலைத்துறைத் தமிழ்த் தலைவர், பேராசிரியர் சிதம்பரநாதன்,

அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறைத்தலைவர் பேராசிரியர், கோ. சுப்பிரமணியம்,

ஆகிய ஒன்பதின்மரைக் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டிருந்தமை தெரிந்தது. இவ் வேற்பாடு நான் எள்ளளவும் எதிர்பாராதது. இக் குழுவில் என்னளவு தமிழாராய்ந்தவரேனும், என் பணியை மேற்பார்க்கத் தக்கவரேனும் ஒருவருமிலர். ஆயினும், எனக்கும் தமிழுக்கும் மாறான இருவராலோ மூவராலோ சூழ்ச்சியாக இஃது ஏற்படுத்தப்பட்டது. என்னை அண்ணாமலை நகரினின்று விரைந்து வெளியேற்றுவதற்கு அமைத்த தள்ளிவெட்டி இதுவென்பதை உடனே கண்டு கொண்டேன்.