பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என் அண்ணாமலை நகர் வாழ்க்கை

59

பேரா. லெ. பெ. கரு. இராமநாதன் அவர்கள், பண்டித வித்துவான், தமிழ்ப் பேராசிரியர் (கீழைக்கலை), அண்ணாமலை பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.

பர்.அ. சிதம்பரநாதன் அவர்கள், (எம்.ஏ., பிஎச்.டி.), தமிழ்ப் பேராசிரியர் (கலைத்துறை), அண்ணாமலை பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர்.

பேரா. கோ. சுப்பிரமணியனார் (எம்.ஏ.,பி.எல்.), தமிழ்ப் பேராசிரியர் (ஆராய்ச்சித் துறை), அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர். பேரா. தெ.பொ. மீனாட்சிசுந்தரம் (எம்.ஏ.,பி.எல்., எம்.ஓ.எல்.), தலைமைத் தமிழ்ப் பேராசிரியர், மண்டலக் கல்லூரி, சென்னை.

திரு. (தி.என்.) சீகண்டையா (எம்.ஏ.), கன்னடப் பேராசிரியர், கன்னடப் பல்கலைக்கழகம், தார்வார். (கன்னடம்)

திரு. கொரடா இராமகிருட்டிண ஐயா, மே/பா. மகாதேவ சாத்திரி,

சங்கராச்சாரி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5. [தெலுங்கு]

33,

திரு. (எம்.பி.) நாராணமேனன் (பி.ஏ.), அடங்காப் பள்ளிகளின் ஓய்வுபெற்ற தலைமை உண்ணோட்டகர், 43, நந்தனார் குடியேற்றம், சைதாப்பேட்டை, சென்னை 15.[மலையாளம்]

நீர் இக் குழுவில் உறுப்பினராயிருக்க ஒப்பி இப் புதுத் துறைப் பணிக்கு உம் அரிய பட்டறிவைக்கொண்டு உதவி நலம் புரியுமாறு உம்மை வேண்டு கின்றேன். இக் குழுச் சென்னையிலாவது அண்ணாமலை நகரிலாவது தேவைக் கேற்ப அடிக்கடி கூடும். அக் கூட்டங்கட்கு நீர் செல்வதற்கு, இப் பல்கலைக்கழக நெறிப்படி உமக்கு வழிச்செலவுப்படி தரப்படும்.

அக் குழுவில் உம் உறுப்பாண்மையை இயன்ற விரைவில் ஏற்றுதவுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

இங்ஙனம் என் இசைவை வேண்டுவதுபோல் எழுதப் பட்டிருந்ததேனும், எல்லாத் திட்டங்களும் அமைப்புகளும் என் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை யென்றும், அவற்றிற்கெல்லாம் வினைமுதல்கள் அண்ணாமலை பல்கலைக்கழக மொழிநூல் துறையை அரக்கர்போல் ஆட்டிவைக்கும் இரு தமிழ்ப்பேராசிரியரென் றும் உணர்ந்துகொண்டேன். ஆதலால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்ற வேண்டின், ஆரியத் தலைமையை யேற்றுத் தமிழைக் காட்டிக் கொடுத்தல் தவிர மற்றெல்லா நிலைப்பாடுகட்கும் இணங்கியே ஆகல் வேண்டும் என்னும் முடிவிற்கு வந்துவிட்டேன். குழுவுறுப்பினர் பன்னிருவருட் பெரும்பாலார் ஆரியச் சார்பாயிருத்தலின், பர். அரசமாணிக்கனாரையும் பர். மு.வ. வையும் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளுமாறு துணைக் கண்காணகரை வேண்டினேன். அவர்களும் இசைந்தார்கள். ஆயினும் நான் எதிர்பார்த்தவாறு என் கை வலியுறவில்லை. ஆரியம் அத்துணை ஓங்கியிருந்தது. புதிதாய் இருவர் சேர்க்கப் பெற்றதினாலோ, பிறிதொரு கரணியத்தாலோ, பின்னர் மாற்றி