பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

ஒழுங்கான மரபியற் காதலைக் குறிக்கும். இஃது இருபாலிடைப்பட்ட உறவியல்களுள் முதன்மை பெற்றதாகும்) மீண்டும், தொல்காப்பிய நெறி மொழிகட்கு மூலமான முந்து தமிழ்நூல்களில் காதல் விரிவாகக் கூறப்பட்ட வகை, முற்றிலும் புதுமையானதாகவும் அனைத்திந்தியச் சமற்கிருத அடிப்படைச் சார்பற்றதாகவும், தோன்றிற்று. இங்ஙனம், வேறுபட்ட வாழ்க்கைக் கூறுகளும் பொருளியற் பண்பாட்டு நிலைக்களங்களும் காதலுணர்ச்சி பயிற்சிகளும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் விரிவான உள்ளிடை யுறவும், உண்மையில் அவை யிருக்கிறபடியே, அதாவது பழந் தமிழிலக்கியத்தின் ஒரு புது முதன்மையாகக் காட்சியளித்தன. இவையெல்லாம் காட்டும் கலைவனப்பும் புதுமையும் எனக்கு மிகுந்த உள்ளக் கிளர்ச்சியூட்டின. அதனால், இவ்வகையால் 1500 முதல் 2000 வரைப்பட்ட ஆண்டுகட்கு முந்திய தமிழகத்தை இந்தியாவின் பிற பாகங்களினின்றும் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டுவதொன் றுண்டென்னும் நிலைமையை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று, என் உள்ளத்தில் ஓர் ஆர்வம் எழுந்தது. பண்டைத் தமிழிலக்கியத்திற் சமற்கிருதச் சொற்களும் கருத்துகளும் மிகக் குறைவென்று பழந்தமிழ் ஆர்வலர் சிலராலும் மிகத் திட்டவட்டமாய்ச் சொல்லப்பட்டது. இவ் விரு செய்திகளும், (கழக இலக்கியத்திற் போன்றே] தமிழிலக்கிய மரபு முற்றும் சமற்கிருதச் சார்பற்றதென நிலைநாட்டுவதாய்த் தோன்றின. இது, தமிழிலக்கியப் பண்பாடுகளின் புது முதன்மையிலும் ஒப்பியல் முன்மையிலும் எளிதாக உணரக்கூடியதும் முறைப் பட்டதுமான பெருமை கொள்வதற்கு உணர்வெழுப்பும் தேற்றமான ஊற்றாக உண்மையில் ஆகிவிட்டது; அதனால், பிரிவுணர்ச்சியை மிகுதியும் தூண்டி விட்டது. இவ் வுணர்ச்சி, இற்றை நாளில், குமுகாயம், அரசியல், சமயம் ஆகிய பிற துறைகளிலும் ஊக்கப் பெறுகின்றது. இதுவே ஒரு வெளியார்க்குத் தோன்றும் கருத்து.

"தமிழ் இங்ஙனமிருப்பினும், ஏறத்தாழ உடன் அடுத்தே, கழக நூல்களை முன்னினும் ஆழ்ந்து கற்று (ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாகத்தான்] நான் அயலானேயல்லன் என்பதைக் கண்டேன். இன்புறுத்துவனவும் மிகத் திட்டவட்டமாய்ப் புதுமுதலானவுமான கூறுகளைக் கொண்டிருந்தும், மிகப் பழைய தமிழ் நூல்களிற் காணும் சூழ்வெளி உட்சாறான அல்லது அடிப்படையான செய்திகளில், மிகுதியும் மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் புராணங்களிலும் காண்பதாகவே யிருந்தது. கழக நூன்மொழி (நான் எங்கெங்கே மூலத்தை நோக்கினும்] மிகப் பெரும்பால் இந்திய மொழிகளில் தூய தற்சமங்கள் அல்லது திரிபடையாச் சொற்கள் மிகுதியாயிருப்பதைக் கருதும் பொழுது, உண்மையில் புதுமையாகவே தோன்றிற்று. ஆனால் [மிகப் பிந்தித்தான்], சமற்கிருதச் சொற்களும் பிற ஆரியச் சொற்களும் தமிழிற் புகுந்து தன் சொல்லாகும் பொழுது அடையும் மாறுதல்களைப்பற்றி, அனவரதவிநாயகம் திறம்பட வரைந்த நூலைப் பார்வையிட்டபின், புதுமையாகவும் விளங்காமலுமிருந்த பல சொற்கள் தெளிவானவும் தெரிந்தனவுமாயின. புது முகங்களின் பின் அறிமுகங்கள்