பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என் அண்ணாமலை நகர் வாழ்க்கை

67

2. இந்திய இனமொழிப் பண்பாட்டுக் கலப்பு

செய்தியின் உண்மை அடிப்படையில் இதுவாகும் (வெவ்வேறு குழுவில் தோன்றிய) பல்வேறுவகைப் பண்பாடுகள் ஒன்றுகூடி ஒரே வாழ்நிலையில் வளர்வதால். பெரிதோ சிறிதோ ஒத்த பொருளாட்சி நிலைமையோடும் பொது வரலாற்றோடும் கூடிய ஒரு சிறப்புவகைப் பண்பாடு ஒரு குறிப்பிட்ட நிலவெல்லைக்குள் தோன்றுகின்றது. இதைச் சுருக்கமாய்ச் சொன்னால், நாட்டினப் பண்பாடுகளின் தொடர்பாலும் முரண்பாட்டாலும் ஒப்புரவாதலாலும் எழுகின்றன என லாம். புதிய வுலகத்தில் இதுவே நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இனப் பண்பாட்டுக் கலப்பிற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுகளுள் ஒன்று இந்தியாவாற் காட்டப்படுகின்றது. அதன் பெருமைக்கும் முற்றுந் தழுவியற்கும், இற்றை நாளில் அமெரிக்காவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இனப் பண்பாட்டுக் கலப்புக்கூட இணையன்று. இப் புலனத்தைப்பற்றி மீண்டும் ஒருமுறை பேசத் தேவையில்லை. நான் முற்கூறியபடி, இதைப்பற்றிய என் கருத்துகளை வேறோரிடத்தில் தெரிவித்திருக்கின்றேன். நமக்குள்ள இந்துப் பண்பாடென்னும் இந்தியாவின் பழமையான பண்பாடு, எண்ணுக்கு மெட்டாத காலத்திலேயே இந்தியாவிற்கு வந்து, அதன் மண்ணிற் பக்கம் பக்கமாய் வாழ்ந்த பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனத்தாரின் கூட்டுவேலை என்னும் பேருண்மை, இன்று நிலவுகின்றது. இருக்கக்கூடிய வகையில், கோல் இனத்தாரின் முன்னோராகிய நிசாதர் அல்லது ஆத்திரியரே இக் கலவைப் பண்பாட்டின் முற்கூறுகளை அமைத்தவராவார். அவர்க்கு முந்தி வந்தவரும் இந்திய நிலத்தினின்று மறைந்து போனவராகத் தெரிபவருமான நீக்கிரோவரை விட்டுவிடலாம். பின்பு, முதற்கண் நண்ணிலக் கடற்கரைவாணராயிருந்தவரும் கிரேக்க நாட்டிலும் அதைச் சேர்ந்த தீவுகளிலும் மேலைச் சின்ன ஆசியாவிலும், எல்லெனிய முன்னை ஆயேகிய நாகரிகத்தை அமைத்தவரொடு அமைத்தவரொடு தொடர்புகொண்டவருமாகச் சிலரால் நம்பப்படுகின்ற (இதுவே என் கருத்தும்) திராவிட மொழியாளர் வந்தனர். அதன்பின், சீன திபேத்திய மொழிகளைப் பேசும் கிராதர் அல்லது மங்கோலியர், இந்திய மாந்தனின் அமைப்பில் மூன்றாம் பெருங்கூறாய் வந்தமைந்தனர். ஆயின், அவர்களின் செல்வாக்கு தெக்காணத்திற்குத் தெற்கே சென்றதாகத் தெரியவில்லை. இறுதியாக, நம் ஆரியர் வந்து, இந்திய நாகரிகத்தை முற்றுவித்து, அதன் அமைப்பிற்குச் சமற்கிருதம் ஆகிய முதன்மையான வெளியீட்டு வாயிலைத் தந்துதவினார்கள். அவர்கள் இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களாக அல்லது ஆளும் இனமாக வந்து, தமக்கு முந்திய இனத்தாரையெல்லாம் மேற்கொண்டார்கள். ஆயின், கிரேக்க நாடு தன்னைச் சிறைபிடித்தவரைச்