பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

சிறைபிடித்த நிலைமை இந்தியாவிலும் ஏற்பட்டது. ஆரியமொழி, நிசாத அல்லது ஆத்திரிய மொழிகளும் சீன - திபேத்திய மொழிகளும் திராவிட மொழிகளும், பேசிய மக்கள் பக்கம் பக்கமாக வாழ்ந்துகொண்டிருந்த வடஇந்தியாவில், உள்ள மொழிக் குழப்பத்திலும் முரண்பாட்டிலும், ஒன்றுபடுத்தி யிணைக்கும் கருவி என ஆயிற்று. வடஇந்தியாவில் ஆரிய முன்னை மக்களால் ஏற்கெனவே ஏற்பட்ட மொழிக் குழப்பத்தில் ஆரிய மொழிக்கு அதன் பெரு வாய்ப்பிருந்தது. பெருந்திரளான வடஇந்திய மக்கள் ஆரிய மொழியை ஏற்றுக்கொண்டு, அதைத் தங்கள் தேவைக்கேற்பச் சரிப்படுத்தும் நிலையில் அதைப் பெரிதும் மாற்றினார்கள். அதனால், அது வேத மொழியிலிருந்து இலக்கியச் சமற்கிருதமாக வும் அதே சமயத்திற் பழம் பிராகிருதங்களாகவும், அதன்பின் இற்றை மொழிகளாகிய புதிய இந்தாரிய மொழிகளாகவும் பெயர்ந்தது.

பர். சட்டர்சி தலைமையுரை, (ப. 18, 19). இக் கருத்துகளைக் காணின், அண்மையில் நீலகண்ட (சாத்திரியார்) 'தமிழ் வரலாறும் பண்பாடும்' என்னும் நூலில் தமிழரைத் தாழ்த்திக் கூறியிருப்பது புதுமையாகத் தோன்றாது. ஏற்கெனவே 1952ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட ‘நந்த மௌரியர் காலம்' (Age of the Nandas and Mauryos) என்னும் தொகுப்பு நூலில், பர். சட்டர்சி பர். இராகவனுடன் இணைந்தெழுதிய மொழியிலக்கியப் பகுதியில். இக் கருத்துகளே கூறப்பட்டுள்ளன. 1955-ல் வெளிவந்த 'தென்னிந்திய வரலாறு' (A History of South India) என்னும் (பேரா. நீலகண்ட சாத்திரியார் எழுதிய) நூலிலும், தமிழர் தாழ்த்தியே கூறப்பட்டுள்ளனர். ஆயினும் என்னைத் தவிர வேறொரு வரும் எதிர்க்கவில்லை. மூவகைக் காப்பாருள் வந்தபின் காப்பாராகக்கூடத் தமிழர் இல்லை; வந்தபின் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றும் அளவினராகவே யுள்ளனர். அதுவும் விரல்விட் டெண்ணத்தக்க ஒரு சிலரே.

பர். சட்டர்சி தலைமையுரையில், தமிழுக்கு மிகக் கேடானதும் அவரையும் மிக இழிவு படுத்துவதுமான செய்தி எதுவெனின், ஸ்த்ரீ என்னும் வடசொல் 'தி' என்னும் பெண்பாலீறாகத் திரிந்தமைந்தது என்பதே.

பத்தாண்டிற்குமுன், இப் பொருள்பற்றிய கட்டுரை மதுரைக் கல்லூரி ஆண்டுமலரில் வெளிவந்ததாகச் சொல்லப்பட்டது. நான் அதைச் ‘செந்தமிழ்ச் செல்வி'யில் மறுத்தேன். ஆதலால், அதோடு அது நின்றுவிட்டதென்று கருதினேன். ஆயின், பர். சட்டர்சி இந்தியச் சமற்கிருதக் குழுத் தலைவராய்த் தமிழ்நாடு வந்த பொழுது, அது மீண்டும் புத்துயிர் பெற்றெழுந்துவிட்டது.

தமிழிற் பெண்பால் காட்டும் ஈறு வடமொழி வருமுன் இல்லையாம். ஸ்த்ரீ என்னும் பெயர், வண்ணான், தட்டான் முதலிய பெயர்களோடு சேர்ந்து, வண்ணான் + ஸ்த்ரீ = வண்ணாத்தி, தட்டான் + ஸ்த்ரீ = தட்டாத்தி என்றானதாம். இதைத் தமிழ் பயிலும் கடை மாணவர்கூடக் கடிந்து சினப்பரே!

முருகன் ஆரியர் வருகைக்கு முற்பட்ட தூய தமிழ்த் தெய்வமென்பது வெள்ளிடை மலையாய் விளங்கித் தோன்றவும், சுப்பிரமணியன் என்பதைத் தமிழர்