பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என் அண்ணாமலை நகர் வாழ்க்கை

71

அவருடைய பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரே தமிழைச் சரியாய் அறியாதிருக்கும்போது, அவர் மாணவர் போன்றாரைப்பற்றி என் சொல்லக் கிடக்கின்றது!

பர். சட்டர்சி பேரா. சேதுவிடம் என்னைப்பற்றி “அவர் படிசு எனக்குப் பொந்திகைப்படவில்லை”. (I am not satisfied with his mood) என்று கூறியதாக வும். அதனால் என்னை மொழிநூல் துறையினின்று பொதுத் துறைக்கு மாற்றியிருப்பதாகவும். பேரா. சேது சொன்னதாக, (ஓய்வு பெற்ற) குமரபாளைய ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி முதல்வர் பேரா. ஆறுமுகனார் என் னிடம் கூறினார். நான் இதை அ.ம.ப.க.க. புகுமுன்னரே எதிர்பார்த்தேனாதலின், எனக்கு இதில் ஒன்றும் வியப்பில்லை.

ஆண்டிறுதியில், திரு. சண்முகனாரும் அமெரிக்காவினின்று திரும்பி வந்தார். அவர் பெற்ற வண்ணனை மொழியியற் பயிற்சிப்படி அவர் பணியைத் தொடங்கினார். சில மாதம் ஒரே அறையில் அவருடன் இருந்தேன். அது திரிசங்கு வானக நிலை போன்றது. ஆண்டு முடிந்து வேனில் விடுமுறை விடப்பட்டது. அடுத்த கல்வியாண்டுத் தொடக்கத்தில், பேரா. கோ. சுப்பிரமணியனார் தலைமையிலிருந்த தமிழாராய்ச்சிப் பொதுத்துறைக் கூடத்தில் எனக்கொரு நாற்காலி யிடப்பட்டது. நாற்காலியென்றது இயற்பொருளிலேயே. ஆங்கிலத்திற் போல் ஆகுபெயர்ப் பொருளிலன்று. அன்றிருந்த நிலைமேடையும் பலர்க்குப் பொது. அதனால் வடநாட்டுப் புகலிலிபோன்ற அயன்மையுணர்ச்சி எனக்கு நீண்டநா ளிருந்துவந்தது.

நிலைமை தெரி படலம்

நான் மொழிநூல் துறையில் தனிப்பட்ட துணைப் பேராசிரியனா யிருந்த பொழுதே, என் அறையில் எனக்கேற்ற நூல்நிலையம் இல்லை. மொழியியல் துறை நூல்நிலையத்திற்கு வேண்டிய நூற்பெயர்ப்பட்டியை மட்டும் விரிவாகத் தொகுத்து அனுப்பச்சொல்லி, அடிக்கடி ஓலை வந்தது. யானும் உடனுடன் தொகுத்துவிடுத்தேன். ஆயினும், அந் நூல்களும் அவற்றைத் தாங்கும் இருப்பு நிலைப் பேழைகளும் வந்துசேர ஓராண்டாயிற்று. அதையடுத்து நானும் துறை மாற்றப்பட்டேன்.

பொதுத்துறைக் கூடத்தைச் சேர்ந்த ஒரு சிறு நூல்நிலையம் உண்டு. அதிலுள்ளவை பெரும்பாலும் தமிழ்நூல்களே. எனக்குரிய வரலாற்று நூல், மொழி நூல், மாந்த நூல் (Anthropology) ஆகிய முத்துறைபற்றிய ஆங்கில நூல்கள் அதில் இல்லை. அதனால், என் உறையுளிலுள்ள என் சொந்த நூல் நிலையத்தை அங்கு மாற்றக் கருதி, பொதுத்துறைக் கூடத்தின் ஒரு கோடியில் இருபாக அகலத்தில் எனக்கு இடம் ஒதுக்கித் தருமாறு பேரா. கோ. சுப்பிரமணியனாரைக் கேட்டேன். அவர் இசைந்ததுபோற் காட்டினும் ஒன்றும் செய்யவில்லை. அது அவர் குற்றமன்று, அன்று நான் தாங்கிய பதவிநிலையே அதற்குக் கரணியம். நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அமர்த்தப் பட்டது மொழிநூல்