பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

செய் செம்மை. செய்தல்

தென்சொற் கட்டுரைகள் கை சிவக்குமாறு ஒரு வினை செய்தல்,

செய்தல்.

இவ்விருவகை மூலங்களுள் எது உண்மையாயினும், கருமம் என்பது தமிழ்ச் சொல்லாதல் தேற்றம். அது வடமொழியில் திரிந்த முதனிலையே யன்றி வேர்ப் பொருள் ஏதுமில்லை.

கரு + வி

=

கருவி. ஒரு தொழில் செய்வதற்கு வேண்டும் மூலப்பொருள் அல்லது துணைப்பொருள்.

ச் சொல் தமிழென்பதை எவரும் மறுக்கார். இது தமிழாயின் இதனொடு தொடர்புள்ள கருமம் என்பதும் தமிழேயாதல் வேண்டும். + அணம் = கரணம் = செயல். மணச் செயற்சடங்கு, செயற்கு வேண்டும் கருவி.

karana.

கரு

கரணம் கரணியம் = அறிவுப் புலக் கருவியான அகக்கரணம். R.V.

கரணம் என்பதை நீட்டிக் காரண என்றும், (அதனொடு பொருந்தக்) கரு என்னும் முதனிலையை நீட்டிக் கார்ய என்றும், வித்தும் விளையும் போலக் கருமமும் பற்றிய இரு நுண்பொருட் சொற்களை அமைத்துக் காண்டனர் வடமொழியாளர். இவற்றைத் தமிழிற் சேர்த்ததினாலேயே, கருமம், கரணம் என்றும் சொற்களும் வடமொழியில் வழங்குதல் பற்றி வடசொல்லெனக் கருதப்பட்டன. காரணம், காரியம் என்னும் இரண்டிற்கும் ஈடாக, கரணியம், கருமியம் என இரு சொற்களை அமைத்துக் கொள்ளலாம். கம்மக் குடம் = கம்மியர் (கன்னார்) செய்த குடம்.

கம் - கம்மி = குயவன். "மட்கலஞ் செய் கம்மி" (பாரத. திரௌ. 64) கலஞ் செய்யும் ஒப்புமையால், குயவனும் கன்னான்போற் கருதப்பெற்றான். கம் - கம்மியம் = 1. கைத்தொழில்; 2. கம்மாளர் தொழில்.

கம்மியம்- கம்மியன் = 1. தொழிலாளி

"கம்மியரு மூர்வர் களிறு” (சீவக. 495)

2. கம்மாளன் (திவா.)

3. நெசவாளி. “கம்மியர் குழீஇ” (மதுரைக் 521)

4. பொறிவினைஞன், mechanic

கம் LOLDIGT GOT (Pkt. kammara) = கொல்லன், தச்சன், சிற்பன், தட்டான், கன்னான் என்னும் ஐவகைக் கம்மியருள் ஒரு வகையன். கம்மாளன் - கம்மாணன். “கம்மாண சேரியும்" (S.I.I. ii). 43

ஒ.நோ. : களவாளி - களவாணி, வளரி – வணரி.

கொல்லனைக் குறிக்கும் கருமகன் என்னும் சொல், கருமம் என்னும் சொல்லினின்று திரிந்த தனிச்சொல் அன்று; இரும்பை யுணர்த்தும் கரு