பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

தென்சொற் கட்டுரைகள்

மூலையை முட்டித் திரும்பியதையும், திரும்புகாலில் கிழக்கு நோக்கித் திரிந்ததையும் காட்டும்.

எ-டு:

துருவ Teut. through, L. trans.

துள் – துரு துருவு துருவ (வி.எ.).

துருத்து - Teut. thrust, L. trud (o) (intrude, protrude, obtrude etc). 2. வேதவாரியத் தமிழ்ச்சொற்கள்

வேதவாரியர் வட இந்தியாவிற்குட் புகுந்தபோது (கி.மு.2000 - 1500), அங்கு வாழ்ந்தவருட் பெரும்பாலார் திரவிடரே. பெலுச்சித்தானத்திலும் வங்காளத்திலும் இன்றும் திரவிட மொழிகள் வழங்குவதையும், காளிக் கோட்டம் (Calcutta) என்னும் பெயர் தூய தமிழ்ச் சொல்லா யிருப்பதையும், ஊன்றி நோக்குக.

ஆரிய வேதம் வடதிரவிடம் வழங்கும் நாட்டில் இயற்றப் பெற்றமையால், நூற்றுக்கணக்கான தென்சொற்கள் அதிற் புகுந்துவிட்டன.

எ-டு: அகவு, அவை - சவை, இலக்கு, உத்தரம், உரு - உருவு - உருவம், உலகு, உவணம் - சுவணம், கடுகம், காலம், கருள் (கருமை), குமரன் - குமரி, தக்கணம், தண்டம், தூது, நடம், பக்கம், மண்டலம், மந்திரம், முத்து - முத்தம், வட்டம்.

=

விரிவஞ்சி இவற்றுட் சிலவற்றிற்கே இங்கு மூலம் விளக்கப்பெறும். அமலுதல் = நெருங்குதல். அமர்தல் நெருங்குதல். அமைதல் நெருங்குதல், நிறைதல், பொருந்துதல், சேர்தல், கூடுதல். திரளுதல். திரண்ட கெட்டி மூங்கில்.

=

அமை அவை = கூட்டம். ம-வ, போலி.

ஒ.நோ: அம்மை - அவ்வை, குமி - குவி.

=

அமை

அவை - சவை. உயிர் முதற் சொற்கள் சொல்லாக்கத்தில் மொழி முதல் மெய்கள் ஏறப்பெறும். அவற்றுள் ஒன்று சகரம்.

எ-டு : உருள் - சுருள், உவணம் - சுவணம், ஏண் - சேண், ஏமம் சேமம், சபா (Sabha) என்னும் சொற்கு வடமொழியிற் பொருத்தமான வேரில்லை.

உத்தரம் = உயரம், உயரமான வடதிசை. தக்கணம் = தாழ்வு, தாழ்வான தென்திசை, குமரிமலை முழுகிப் பனிமலை தோன்றியபின், நாவலத்தில் வடதிசை யுயர்ந்து தென்றிசை தாழ்ந்தது. தக்குத் தொண்டை = தாழ்ந்த குரல். குடமலையால் உயர்ந்திருப்பது மேற்றிசையென்றும், குணகடலால் தாழ்ந்திருப்பது கீழ்த்திசை யென்றும் வழங்கி வருதல் காண்க.