பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

தமிழினுக் குலகினில் தகுவதே தலைமை தமிழரும் அடையவே தாழ்விலா நிலைமை

இமிழ்தரு மொழியியல் எய்துக நலமே

எமதுமெய் வரலாறே எழுகவே வலமே.

தென்சொற் கட்டுரைகள்

வேனிலிற் கான்மலை வெம்மைகொள் பாலையின் விளைநில மாவதிந் நாடு

மின்னும்பல் மணிகளும் மிகுவிலை யாற்பெற

மேலுலகும் விரும்பும் நாடு

கொன்றுதன் மகனையே கொடுமையை நிமிர்த்துச்செங் கோன்முறை குலவிய நாடு

நீலியின் கணவற்கு நிகழ்த்திய வாய்மொழி

நிறைவேற்றின வேளாளர் நாடு

அறியாது முரசணை அயர்ந்திடும் புலவர்க்கும் ஆலவட்டம் விசிறும் நாடு

சித்தரின் மருத்துவம் சிறந்தபொன் னாக்கமும் சிலம்பொடு திகழ்ந்ததிந் நாடு

܀܀