என் பெயர் என்சொல்?
உர்: உர்
—
உரு. உருத்தல் = அழலுதல்.
89
ஆகம் உருப்ப நூறி” (புறம். 25 : 10)
―
―
ரு உரும் உரும்பு = கொதிப்பு.
"உரும்பில் கூற்றத் தன்ன" (பதிற்றுப். 26 : 13).
உரு
உருமம் = வெப்பம். நண்பகல்.
உருமகாலம் = கோடைகாலம்.
உருமித்தல் = புழுங்குதல்,
=
உரு - உருப்பு வெப்பம்.
"கன்மிசை உருப்பிறக் கனைதுளி சிதறென” (கலித். 16 : 7)
உருப்பு உருப்பம் = வெப்பம்.
“கனலும்....... ........ உருப்பமெழ” (அரிச். பு. விவா. 104)
―
―
—
உரு உருகு உருக்கு உருக்கம்.
=
உருகுதல் வெப்பத்தினால் இளகுதல், மனம் இளகுதல் (இரங்குதல்). உருக்கு = உருகின இரும்பு (எஃகு).
உருக்காங்கல் = உருகிப்போன செங்கல்.
உர் - உரி = நெருப்பு (கன்னடம், துளுவம்).
உரி என்னும் வடிவம் தமிழில் வழக்கற்று மறைந்தது.
உரி எரி
—
=
நெருப்பு.
நெருப்பைக் குறிக்கும் 'உரு' வேர் தமிழ்ச்சொற்கள் பிறமொழிகளிலும் சென்று வழங்குகின்றன.
இலத்தீன் (Latin) - உர், (to burn)
அர்மீனியம் (Armenian) ஓர் = நெருப்பு.
ஆபுக்கானியம் (Afghan) - ஓர், வுர் = நெருப்பு.
எபிரேயம் (Hebrew) ஊர் = நெருப்பு, ஓர் = ஒளி.
நெர்: நெர் - நெரி - நெரிதல் = நெருங்குதல், உரசுதல், நொறுங்குதல். நெர் – நெரு - நெருப்பு. நெருப்பு -நிப்பு (தெலுங்கு).
அரபியம் (Arabic) - நார் = நெருப்பு, நூர் = ஒளி.
தேய்: தேய்தல் = உரசுதல்.
தேய் - தீய் - தீ = நெருப்பு, விளக்கு, நரகம்.
தீ - தீமை = தீயின்தன்மை. தீ. தீய = கொடிய,
தீய்தல் = எரிந்துபோதல், கருகுதல், பற்றிப்போதல், தீதல் = தீய்தல்.