பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - கற்பியல் - புணர்ச்சி விதும்பல்

-

105

(இ-ரை) எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் - மற்ற நேரமெல் லாங் காணக்கூடியதா யிருந்தும், கண்ணிற்கு மைதீட்டும்போது மட்டும் தீட்டுக் கோலைக் காணமுடியாத கண்ணேபோல; கண்டவிடத்துக் கொண்கன் பழி காணேன் கணவரைக் காணாத விடத்தெல்லாம் அவர் தவற்றைக் கண்டிருந்து, அவரைக் கண்டவிடத்து மட்டும் அதைக் காணவியலாது போகின்றேன்.

1286.

காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற் காணேன் றவறல் லவை.

(இதுவுமது.)

(இ-ரை.) காணுங்கால் தவறாய காணேன் - கணவரை யான் காணும் பொழுது அவர் தவறுகளை ஒருசிறிதுங் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறு அல்லவை காணேன் - அவரைக் காணாத பொழுதோ அத் தவறுகளை யல்லது பிறவற்றைக் காண்கின்றிலேன்.

முன்பு நான் சொன்ன அவருடைய தவறுகளை இதுபோது காணாமை யாற் புலந்திலேன் என்பதாம். கொண்கனை என்னுஞ் செயப்படுபொருள் அதி காரத்தால் வந்தது.

1287. உ-த்த லறிந்து புனல்பா- பவரேபோற்

பொ-த்த லறிந்தென் புலந்து.

(இதுவுமது.)

(இ-ரை.) உ-த்தல் அறிந்து புனல் பா-பவரேபோல் தம்மை யிழுத்துக் கொண்டு போகுமென்பதை அறிந்திருந்தும் வேகமா யோடுகின்ற வெள்ளத் திற் பா-வார்போல்; பொ-த்தல் அறிந்து புலந்து என் யறிந்திருந்தும் கணவரோடு ஊடி என்ன பயன்?

ஊடல் நீடு நில்லாமை

புலத்தலால் துன்பமேயன்றி யின்பமில்லையென்பதாம். பா-வார்போற் புலந்து என இசையும். “பொ-த்தலறிந்தே னென்பது பாடமாயின், உ-த்தலறிய ஓடுநீருட் பா-வார்போல முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை யறிந்தேன்; இனி அது செ-தற்பாற் றன்றென வுரைக்க” என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருத்தமே. ஏகாரம் பிரிநிலை.