பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

திருக்குறள்

தமிழ் மரபுரை






(இ-ரை.) என் நெஞ்சு - என் உள்ளமே! உறாதவர்க் கண்ட கண்ணும் கணவர் இன்று நம்மாட்டு அன்பில்லாதவர் என்று அறிந்த பின்பும்; செறார் என அவரைச் சேறி – நாம் அவரிடஞ் சென்றால் சினவாமற் சேர்த்துக் கொள்வா ரென்று கருதி அவர்பாற் செல்லுகின்றா-; இதுபோலும் மடமை வேறுண்டோ?

பழங்காதல் நோக்கிச் செல்கின்றா-. நீ கருதியது நிறைவேறுமோ வென் பதாம். 'அவரை' வேற்றுமை மயக்கம்; இரண்டாவது ஏழாவதில் மயங்கிற்று. ‘உறாஅ’ இசைநிறை யளபெடை. செறாஅர்' எதுகைபற்றி வந்த இன்னிசை யளபெடை.

1293. கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல்.

(இதுவுமது.)

(இ-ரை.) நெஞ்சே - என் உள்ளமே! நீ பெட்டாங்கு அவர் பின் செலல் என்னிடத்து நில்லாது நீ விரும்பியவாறே அவரிடஞ் செல்லுதற்குக் கரணியம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ - நொடித்தவர்க்கு உறவில்லை என்னும் உலக நடப்போ, வேறோ? சொல்வாயாக.

என் கட்டிற் கடங்காது செல்கின்றா யென்பாள் 'பெட்டாங்கு' என்றும், தான் மான மிழந்தமையின் 'கெட்டார்க்கு' என்றும், தன்வயமின்றிப் பிறர் வயப் படுதல் அடிமைத்தனம் என்பாள் 'பின் செலல்' என்றும் கூறினாள். உடன் பிறந்து உடன் வாழும் உள்ளமும் உதவாதநிலையில் உள்ளேன் என்பதாம். பெட்ட ஆங்கு பெட்டாங்கு.

1294.

இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெ-து துவ்வா-காண் மற்று.

(இதுவுமது.)

(இ-ரை.) நெஞ்சே என் உள்ளமே! துனிசெ-து மற்றுத் துவ்வா- கணவரைக் கண்டால் அவர் தவறு நோக்கி முன்பு ஊடி அதை அளவறிந்து நீக்கி அதன் பின்பு கூடக் கருதா-, கண்டவுடன் இன்பம் நுகரக் கருதுகின்றா - ; இனி அன்ன நின்னொடு யார் சூழ்வார் ஆதலால், இனி அத்தகைய செ -திகளை உன்னோடு கூடி யார் எண்ணுவார்? நான் இனி எண்ணேன்.